சர்க்கரை நோயாளியா நீங்கள்? இந்த பழங்கள் வேண்டாம், ஜாக்கிரதை!!
30 Dec,2022
நீரிழிவு நோயாளிகள் எதை சப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது என்ற சந்தேகம் பலருக்கு இருந்துகொண்டே இருக்கும். பழங்களை உட்கொள்ளும் போதும் இந்த குழப்பம் இருக்கிறது. பெரும்பாலான மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல வகையான பழங்களை சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
1 /5
அதிக சர்க்கரை அளவு கொண்ட பழங்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவு 70 முதல் 100 வரை இருந்தால், அத்தகைய பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக சர்க்கரை அளவு உள்ளது என்று பொருள். சர்க்கரை நோய் இருந்தால் அல்லது அறிகுறிகள் தென்பட்டால் கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகம் உள்ள பழங்களை உட்கொள்ளக் கூடாது.
2 /5
தர்பூசணி, உலர்ந்த பிளம்ஸ், அன்னாசிப்பழம், பழுத்த வாழைப்பழங்கள், ஆரஞ்சு, உலர்ந்த திராட்சை, திராட்சை மற்றும் பேரீச்சம்பழம் போன்ற இனிப்புப் பழங்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இது சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.