ஆண்கள் தூக்கமின்மைக்கு காரணம் ,தீர்வு!
20 Nov,2022
ஆண்கள் தங்களை எப்போதும் பிஸியான ஷெட்யூலில் வைத்துக் கொள்கிறார்கள். இது காலப்போக்கில் அவர்கள் மீண்டுவர முடியாத மன அழுத்தத்துக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. அதாவது, வாழ்க்கை முறையாகவே அவர்களுக்குள் மன அழுத்தம் இருந்துவிடுகிறது. இதில் இருந்து விடுபடுவதற்கு முதலில், தாங்கள் மன அழுத்தத்தில் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். மன அழுத்தம் இருந்தால் ஒழுங்கான தூக்கம் இருக்காது.
வேலை பளு
பொதுவாக அதிக வேலை இருந்தால் அசதி காரணமாக விரைவாக தூங்கிவிடுவார்கள் என கூறப்படுவதுண்டு. ஆனால், கம்யூட்டர் முன்பு நீண்ட நேரம் கண் விழித்து வேலை பார்ப்பவர்களுக்கு இந்த கூற்று பொருந்தாது. அவர்கள் முழு நேரமும் கண்களை சிமிட்டாமல் கம்யூட்டர் முன்பு அமர்ந்திருப்பதால் அவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை காலப்போக்கில் வந்துவிடும். அதற்கேற்ப தங்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது.
கனவு
ஆழ்ந்த தூக்கம் என்பது வேறு, கனவுகளுடன் தூங்கிக் கொண்டிருப்பது என்பது வேறு. சிலர் தங்களுக்கு தூக்கம் வரவில்லை என்பதற்காக ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு படுத்திருப்பார்கள். இது தூக்க கணக்கிலேயே சேராது. எந்த சிந்தனையும் இல்லாமல் ஆழ்ந்து உறங்க வேண்டும். அதற்கு நாள் முழுவதும் ஏற்பட்ட விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. அப்படி செய்தால் உங்களுக்கு தூக்கம் எட்டிகூட பார்க்காது.
தூக்கமின்மைக்கு தீர்வு
தூக்கமின்மைக்கு ஒரே தீர்வு, நிரந்தர தீர்வு என்றுகூட சொல்லலாம். அதுஎன்னவென்றால் உங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக் கொண்டு, போதுமான உடற்பயிற்சி செய்து, நேரமாக உறங்கச் செல்ல வேண்டும். அதிகாலை கண் விழிக்க வேண்டும். இப்படி உங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் நிச்சயம் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்.