சர்க்கரை நோயாளிகள் எந்த நேரத்தில் உடல் பயிற்சி செய்ய வேண்டும் ?
10 Nov,2022
சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விஷயம் உடல் பயிற்சி. இந்நிலையில் வாரத்திற்கு சில நாட்கள் மட்டுமே உடல் பயிற்சி செய்யலாம் என்ற எண்ணத்தை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விஷயம் உடல் பயிற்சி. இந்நிலையில் வாரத்திற்கு சில நாட்கள் மட்டுமே உடல் பயிற்சி செய்யலாம் என்ற எண்ணத்தை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். சமீபத்தில் நெதர்லாந்தில் நடைபெற்ற ஆய்வில், மாலை நேரம் அல்லது இரவு நேரத்தில் உடல் பயிற்சி செய்தால் சர்ககரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாள் முழுவதும் ஒரு இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு வேலை செய்துவிட்டு, 1 மணி நேரம் மட்டும் உடல் பயிற்சி செய்தால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்காது.
நாள் முழுவதும் நாம் ஏதேனும் செய்து கொண்டிருக்க வேண்டும். இந்நிலையில் காலை நடக்க வேண்டாம் என்று இந்த ஆய்வு கூறவில்லை. ஆனால் காலையில் நேரம் இல்லாதவர்கள் மாலை அல்லது இரவில் உடல் பயிற்சி செய்தாலும் சிக்கல் இல்லை என்றுதான் இந்த ஆய்வு கூறுகிறது. இதய நோய் உள்ளவர்கள் மட்டும் மருத்துவரிடம் பரிந்துரை கேட்ட பிறகு உடல் பயிற்சி செய்ய வேண்டும். மேலும் வாரத்தில் 4 நாட்களாவது உடல் பயிற்சி செய்வது கட்டாயமாக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்