முதல் முறையாக தாய்ப்பாலில் நுண் பிளாஸ்டிக் பொருள்கள் கண்டுபிடித்த இத்தாலி
11 Oct,2022
முதல் முறையாக தாய்ப்பாலில் நுண்-பிளாஸ்டிக் பொருள்களை இத்தாலி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதனால் பிறந்த பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புக் குறித்து ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இத்தாலியில் குழந்தை பெற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு 34 தாய்மாரிடமிருந்து தாய்ப்பால் பெறப்பட்டது.
அவர்களில் 75 விழுக்காட்டினரின் தாய்ப்பாலில் நுண்-பிளாஸ்டிக் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. நுண்-பிளாஸ்டிக் பொருள்கள் சுற்றுச்சூழலில் எந்த அளவுக்குப் பரவியிருக்கின்றன என்பதை அது காட்டுவதாக ஆய்வு கூறியது.
கர்ப்பக் காலத்தின்போதும் தாய்ப்பால் கொடுக்கப்படும் காலக்கட்டத்தின்போதும் நுண்-பிளாஸ்டிக் கொண்ட பொருள்களின் பயன்பாட்டை எவ்வாறு குறைப்பது என்பது ஆராயப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும் பிறந்த பிள்ளைகளுக்குத் தாய்ப்பாலே சிறந்தது என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது