கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான பல அறிகுறிகள் இருந்தாலும், புறக்கணிக்கக் கூடாத சில எச்சரிக்கை அறிகுறிகளை பற்றி இன்று நாம் இங்கு காண உள்ளோம்.
இந்த 3 அறிகுறிகள் இருந்தா உங்க உடம்புல கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குனு அர்த்தம்
அதிக கொலஸ்ட்ரால் எச்சரிக்கை அறிகுறிகள்: மோசமான வாழ்க்கை முறையாலும், பரபரப்பான வாழ்க்கை முறையாலும், மக்களின் உணவுப் பழக்கம் சீர்குலைந்து போகிறது, இதனால் மக்கள் தொடர்ந்து புதிய நோய்களுக்கு ஆளாகிறார்கள். அதேபோல் உணவு மற்றும் பானங்கள் தொடர்பான தவறுகளை தொடர்ந்து செய்வதால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவும் அதிகரிக்கிறது. இதனால் பல நோய்கள் வரலாம். எனவே கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான பல அறிகுறிகள் இருந்தாலும், புறக்கணிக்கக் கூடாத சில எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன, அதை பற்றி இன்று நாம் இங்கு காண உள்ளோம்.
அதிக கொலஸ்ட்ரால் அளவு இரத்த நாளங்களைத் தடுக்கிறது, பின்னர் இதயம் உட்பட முழு உடலிலும் இரத்த விநியோகம் சரியாக செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் தவிர, இதய நோய் அபாயம் அதிகரிக்கிறது.
பொறித்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அபாயத்தை அதிகரிக்கும், ஏனெனில் சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான உணவுகள் எண்ணெய் பொருட்களால் செய்யப்பட்டவை. இந்த எண்ணெய்களில் நிறைந்துள்ள கொழுப்பு மிகவும் அதிகமாகனது, இது இரத்தத்தில் கெட்ட கொழுப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன் உடலில் அதிக கொலஸ்ட்ராலைக் கண்டறிய லிப்பிட் ப்ரொஃபைல் டெஸ்ட் செய்யப்படுகிறது, ஆனால் இன்று கையில் தெரியும் இதுபோன்ற சில அறிகுறிகளை நாம் காண உள்ளோம்ம், இது அதிகரித்த கொழுப்பைக் கண்டறிய உதவும்.
அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, இதயம் இரத்தத்தை சரியாக பம்ப் செய்ய முடியாது, இதன் காரணமாக கைகளில் இரத்தம் குறைவாக இருக்கும், இதன் காரணமாக கையில் வலி தொடங்குகிறது. எனவே நீங்கள் உங்கள் கைகளில் கடுமையான வலியை அனுபவித்தால், அதை புறக்கணிக்காதீர்கள்.
கையின் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் குறைவதால், வலியுடன் கையில் உணர்வு பிரச்சனையும் உள்ளது. உங்கள் கைகளில் கூச்ச உணர்வு இருந்தால், நீங்கள் உடனடியாக விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சரிபார்க்க வேண்டும்.
இரத்தம் கையில் சரியாக இருக்கும்போது நகங்களின் நிறம் வெளிர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பாக இருக்கும், ஆனால் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்த பிறகு, நகங்களுடன், தோலின் நிறமும் மாறத் தொடங்குகிறது. உங்கள் நகங்களின் நிறமும் மாறுகிறது என்றால், தவறுதலாக கூட அதை அலட்சியப்படுத்தாதீர்கள்.