உலகை மிரட்டும் குரங்கம்மை வராமல் தடுப்பது எப்படி?
25 May,2022
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வந்த நிலையில், மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் பெருந்தொற்றாக உருவெடுக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல் உள்ளிட்ட உலகின் சுமார் 12 நாடுகளில், 92 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பரவுவது எப்படி?
குரங்கு காய்ச்சல் ஆனது பறவை காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தொடங்குகிறது. இவை முதலில் நிணநீர் மண்டலங்களில் வீக்கம் ஏற்படுகிறது.
அதன் பின்னர் முகம் மற்றும் உடலில் சொறி தோன்றும். பொதுவாக, அதன் தொற்று இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும்.
மேலும், தொற்று உடலில் இருந்து வெளியேறும் திரவம், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்கள், போன்றவற்றின் மூலம் பரவலாம்.
அறிகுறிகள்
உடலில் கொப்புளங்கள் இருப்பதுடன், காய்ச்சல் பாதிப்பும் இருக்கும். சளி, தலைவலி, தசை வலி, சோர்வு போன்றவை இந்த நோயின் மற்ற அறிகுறிகளாகும்.
விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம் தவிர்க்கலாம். பெரியம்மை தடுப்பூசி இந்த நோயில் 85 சதவீதம் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.
இதுவரை இந்தியாவில் குரங்கு காய்ச்சல் நோயின் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை, ஆனால் மற்ற நாடுகளில் பரவுவதைக் கருத்தில் கொண்டு, கவனமாக இருப்பது மிகவும் முக்கியம்.