கொரோனாவில் இருந்து மீண்டோருக்கு தொடரும் அறிகுறிகள்: ஆய்வில் தகவல்
14 May,2022
கொரோனாவில் இருந்து குணமடைந்தோரில், பாதிக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு பின்பும், அதற்கான அறிகுறிகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுதும், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் 'லான்செட்' என்ற மருத்துவ இதழில், சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியானது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மேம்பட்டு, வேலைக்கும் செல்ல துவங்கிவிட்டனர்.
எனினும், குணமடைந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னும், அதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. குறைந்தபட்சம் ஒரு அறிகுறியாவது அவர்களிடம் உள்ளது. இவர்களில் பலருக்கு, நீண்ட கால பக்கவிளைவுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.