ஒமிக்ரானின் புதிய அறிகுறி: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
24 Jan,2022
Omicron தொற்று பாதித்த நோயாளிகளுக்கு ஏற்பட்ட புதிய அறிகுறி குறித்து அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை ஒழிந்தபாடில்லை. இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து omicron என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது.
கொரோனா, டெல்டாவை விட இந்த வைரஸ் வேகமாக பரவ கூடியது என உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய வைரஸின் அறிகுறிகள் குறித்து இன்று வரை தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் Omicron நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து வந்ததில் புதிய வகையான அறிகுறி ஒன்று ஏற்படுவதாக அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Omicron நோயாளிகள் பலருக்கு காது வலி ஏற்பட்டுள்ளது. அதில் சிலருக்கு காதில் கிங்க்க்க் என்ற சத்தம் கேட்டுள்ளது. இந்த Omicron பாதிப்பு ஏற்படும் முன்பு இந்த அறிகுறி பலருக்கு தென்ப்பட்டு உள்ளது.
இன்னும் சிலருக்கு காது அடைத்துக்கொள்ளும் பிரச்சனையும் மற்றும் சிலருக்கு காதில் விசில் அடிப்பது போன்ற சத்தமும் கேட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் இந்த அறிகுறி இருந்ததாக கூறப்படுகின்றது.