கொரோனா தடுப்பூசி, கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது: சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியில் தகவல்
07 Nov,2021
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியா உள்பட பல நாடுகளில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிலையில் கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறபோது, அது அவர்களது கருவுக்கும், நஞ்சுக்கொடிக்கும் பாதுகாப்பு அளிக்கிறது, அத்துடன் கர்ப்ப கால ஆபத்துகளில் இருந்தும் பாதுகாப்பை அதிகரிக்கிறது என்று சுவிஸ் நாட்டில் சுவிட்சர்லாந்து நாட்டு வைராலஜி மற்றும் நோய் எதிர்ப்பியல் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி விஞ்ஞானிகள் கூறும்போது, “கர்ப்பிணிகள் அதே வயது கொண்ட மற்றவர்களை காட்டிலும் கொரோனா தொற்று பரவுவதற்கு 70 சதவீதம் கூடுதல் வாய்ப்பு உள்ளது. கடுமையான பாதிப்பு அபாயமும் 10 சதவீதம் அதிகம்” என தெரிவித்தனர். எனவே கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறபோது, அது அவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது.