குறிப்பாக வயதானவர்களில் இந்த வைட்டமின் குறைபாடுகள் அதிகம் காணப்படுகின்றன. முக்கிய ஊட்டச்சத்தான வைட்டமின் பி12-ஐ நம் உடல் இயற்கையாக உற்பத்தி செய்வதில்லை என்பதால் சில உணவுகள் மூலம் மட்டுமே இதை பெற முடிகிறது.
தல் எலும்புகள் வரை உடலின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த தேவையான மிக முக்கிய ஒரு ஊட்டச்சத்து வைட்டமின் பி 12 ஆகும். ரத்த சிவப்பணுக்கள், டிஎன்ஏ உற்பத்தி மற்றும் நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.உலகம் முழுவதும் காணப்படும் பொதுவான குறைபாடுகளில் பி 12 வைட்டமின் குறைபாடும் ஒன்று. சுமார் 15 சதவீத உலக மக்கள் வைட்டமின் பி 12 குறைபாட்டை கொண்டுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக வயதானவர்களில் இந்த வைட்டமின் குறைபாடுகள் அதிகம் காணப்படுகின்றன. முக்கிய ஊட்டச்சத்தான வைட்டமின் பி12-ஐ நம் உடல் இயற்கையாக உற்பத்தி செய்வதில்லை என்பதால் சில உணவுகள் மூலம் மட்டுமே இதை பெற முடிகிறது. இறைச்சி, மீன், கோழி, முட்டை மற்றும் பால் உள்ளிட்ட விலங்கு உணவுகளில் இயற்கையாகவே வைட்டமின் பி12 காணப்படுகிறது.
இருப்பினும், சில வகையான ரொட்டி மற்றும் தாவர அடிப்படையிலான பால் போன்ற B12-உடன் வலுவூட்டப்பட்ட பொருட்களை எடுத்து கொள்வதன் மூலமும் இந்த வைட்டமினை பெறலாம். சில கடல் உணவுகளிலும் இவை காணப்படுகின்றன. B12 வைட்டமினை உறிஞ்சும் குடலின் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி கொண்டவர்கள், நீரிழிவு பாதிப்பிற்காக மெட்ஃபோர்மின் மருந்தை எடுப்பவர்கள், சைவ உணவுகளை மட்டுமே தொடர்ந்து சாப்பிடுபவர்கள், ஆன்டாசிட் மருந்து சாப்பிடுபவர்கள் என பலரும் பி12 குறைபாடு ஆபத்தில் இருக்கிறார்கள். வைட்டமின் பி12 பற்றாக்குறை காரணமாக உடலின் முக்கிய செயல்பாடுகள் காலப்போக்கில் தாறுமாறாக போவதற்கான அபாயங்கள் இருக்கின்றன.
குறைபாட்டிற்கான காரணங்கள்..
தாவர அடிப்படையிலான சில மூலங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளில் வைட்டமின் பி 12 இருந்தாலும் கூட கடல் உணவு, . கோழி, இறைச்சி, மீன், முட்டை உள்ளிட்டவற்றில் இந்த சத்து அதிகம் என்பதால் நாம் முன்பே குறிப்பிட்டபடி சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு எளிதில் வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படுகிறது. அதே போல குடலில் இருக்கும் நாள்பட்ட அழற்சி மற்றும் பிற செரிமான பிரச்சனைகள், சக்திவாய்ந்த ஊட்டச்சத்தான வைட்டமின் பி 12-ஐ குடல் உறிஞ்சுவதை கட்டுப்படுத்துகிறது. தீவிர ரத்த சோகை உள்ளவரின் உடல் வைட்டமின் பி 12-ஐ உறிஞ்சுவது சிரமம். வைட்டமின் பி 12 குறைபாட்டின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை கவனித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பது அவசியம்பலவீனம் மற்றும் சோர்வு..
பலவீனம் மற்றும் சோர்வு ஆகியவை வைட்டமின் பி12 குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன. ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உடலில் போதுமான வைட்டமின் பி 12 இல்லாத போது பலவீனம் மற்றும் அதீத சோர்வை ஒருவர் உணர்கிறார்.
நாக்கில் மாற்றங்கள்..
வைட்டமின் பி12 போதுமான அளவு இல்லாத ஒருவர் நாக்கின் மேற்பரப்பில் அமைந்திருக்கும் சுவை மொட்டுக்களில் பாதிப்பை சந்திக்க நேரிடும். இதனால் சுவை உணர்வில் மாற்றம், நாக்கில் வலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்.
ஊசி குத்துவது போன்ற உணர்வு..
நரம்பு செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது மற்றும் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை எளிதாக்குவது வைட்டமின் பி 12-ன் முக்கிய பணி. எனவே வைட்டமின் பி12 குறைபாடுகளை சந்திக்கும் ஒருவர் நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். இதன் விளைவே கைகள், கால்கள் மற்றும் உடலின் பல இடங்களில் ஊசி குத்தியது போன்ற வலி உணர்வு. மேலும் தலைச்சுற்றல், சோர்வு போன்ற உணர்வுகளையும் அடிக்கடி அனுபவிக்க நேரிடலாம்.
இவை தவிர விஷயங்களை நினைவில் கொள்வதில் சிக்கல் மற்றும் அசாதாரண நினைவாற்றல் இழப்பு, அதிகரித்த கவலையுணர்வு, அதிகரித்த இதய துடிப்பு மற்றும் சுவாசத்தில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளும் வெளிப்படும். தவிர அரிதான சந்தர்ப்பங்களில், B12 குறைபாட்டால் ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்பு பார்வை நரம்பை பாதிக்கும். இது மங்கலான அல்லது குழப்பமான பார்வை பிரச்சனை ஏற்பட ழிவகுக்கும்.