வைப்பர் வகை பாம்பு விஷத்திலிருந்து கோவிட் தொற்றுக்கு மருந்து: பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
02 Sep,2021
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பிரேசிலிய வைப்பர் வகை பாம்புகளின் விஷம் ஒரு குறிப்பிடத்தக்க மருந்தாக மாறக்கூடும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் Jararacussu Pit என்று அழைக்கப்படும் ஒரு வகை கண்ணாடி விரியன் பாம்பின் விஷத்தில் உள்ள மூலக்கூறை எடுத்து, அதனை குரங்குகளுக்கு செலுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இந்த மூலக்கூறு, குரங்கின் செல்களில் கொரோனா வைரஸ் இனப்பெருக்கத்தைத் தடுத்து, தன்னைத்தானே 75% பெருக்கக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்தக்கட்டமாக மனித செல்களில் இதனை செலுத்தி சோதனை செய்ய ஆய்வாளர்கள் தீர்மானித்துள்ளனர். வெவ்வேறு டோஸ்களை செலுத்தி, அதன் திறனை பகுப்பாய்வு செய்யவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாவோ பாலோவின் மாநில பல்கலைக்கழகத்தின் (யுனெஸ்ப்) அறிக்கையின்படி, வைரஸ் உயிரணுக்களுக்குள் செல்வதை முதலில் தடுக்க முடியுமா என்பதை மதிப்பீடு செய்தால் மட்டுமே சரிபார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்று Jararacussu Pit, இவ்வகை பாம்புகள் 6 அடி (2 மீட்டர்) நீளம் வளரக்கூடியவை. அவை கடலோர அட்லாண்டிக் காட்டில் வாழ்கின்றன மற்றும் பொலிவியா, பராகுவே மற்றும் அர்ஜென்டினாவிலும் காணப்படுகின்றன.