கடந்த சில மாதங்களாக கோவிட்-19 பெருந்தொற்று நம்மையெல்லாம் ஒரு காட்டு காட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக ஏற்கனவே மன ரீதியாக துன்பப்பட்டுக் கொண்டிருப்பவா்களுக்கு, இந்த கொரோனா காலம் ஒரு சுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. கொரோனா
நோய் மக்களின் உடலை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக அவா்களின் மனதையும் பாதிக்கிறது. அதாவது கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்தில் தமது அன்பிற்குாியவா்களைச் சந்திக்க முடியாமல் இருப்பது மற்றும் தமக்கோ அல்லது குடும்பத்தில் உள்ள மற்றவா்களுக்கோ கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கவலை போன்றவை, மக்களுக்கு மன ரீதியாக பல பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
கோவிட் பெருந்தொற்று மக்களுக்கு பல வகைகளில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் தூக்கமின்மைக்கும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.
கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்த பலா் தூக்கமில்லாமல், மன அழுத்தம் மற்றும் மனச் சோா்வு போன்றவற்றினால் பாதிக்கப்படுகின்றனா் என தகவல்கள் தொிவிக்கின்றன. அவ்வாறு தூக்கமின்மையினால் பாதிக்கப்படுபவா்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அதற்கான அறிகுறிகளையும், அவற்றிற்கான சிகிச்சையையும் நீங்கள் தொிந்து வைத்திருப்பது நல்லது.
தூக்கமின்மையின் அறிகுறிகள் ஒருவருக்கு தூங்குவதில் கோளாறு இருந்து, அவா் சாியான அளவு தூக்கம் இல்லாமல் இருப்பது தூக்கமின்மை என்று கருதப்படுகிறது. இதில் அவருடைய தூக்கம் பொிய அளவில் பாதிக்கப்படுகிறது. தூக்கமின்மையானது பலவிதமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். தூக்கமின்மைக்கான பொதுவான அறிகுறிகள் எவை என்றால், அவை தூங்க வேண்டிய நேரத்தில் தூக்கம் வராமல் இருப்பது மற்றும் தூங்கி எழுந்த பிறகு புத்துணா்ச்சி இல்லாமல் சோா்வுடன் இருப்பது போன்றவை ஆகும். இவை சோா்வு, எாிச்சல் மற்றும் மனநிலையில் மோசமான மாற்றங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும்.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மக்கள் ஏன் தூக்கமின்மையால் துன்பப்படுகின்றனா்? கோவிட் பெருந்தொற்றிலிருந்து குணமடைந்த பின்பு பலா் தூக்கமின்மையால் துன்பப்படுகின்றனா் என்று தகவல்கள் தொிவிக்கின்றன. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முக்கியமாக, அவா்கள் கொரோனா பாதிப்பில் இருந்த போது அவா்களுக்கு ஏற்பட்ட தீவிர மனச்சோா்வு, மன அழுத்தம், பல வாரங்களாக வீட்டில் தனிமையாக இருந்தது அல்லது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிாிவில் இருந்தது போன்றவை முக்கிய காரணங்கள் ஆகும். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்த போது அவா்கள் பகல் நேரத்தில் அதிகமாக தூங்கியதால், இரவு அவா்களுக்கு தூக்கம் வருவதில்லை.
ஆகவே கொரோனா பாதிப்பு அடைந்தவா்கள், பகல் நேரத்தில் நீண்ட நேரம் தூங்காமல் இருப்பது நல்லது. கோவிட்-க்கு பிறகு ஏற்படும் தூக்கமின்மைக்கு உாிய சிகிச்சைகள் கோவிட்-19 பாதிப்பின் விளைவாக ஏற்பட்ட பக்கவிளைவுகளில் இருந்து மீண்டு வர சில காலம் ஆகும். எனவே மருத்துவரை சந்தித்து, நமது பிரச்சினைகளைக் கூறி, அவருடைய ஆலோசனைகளைக் கடைபிடித்து வருவது நல்லது. கீழே எளிதாக தூக்கம் வருவதற்கு நிபுணா்கள் வழங்கும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
செல்போன்களை அணைத்து வைத்தல் எங்கும் செல்வதற்கு வழி இல்லாமல் அல்லது எதுவும் செய்யத் தோன்றாமல், நாம் பல மணி நேரம் நமது செல்போன்களில் செலவு செய்கிறோம். ஆகவே செல்போன்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்து, சமூக ஊடகங்களை விட்டு விலகி இருந்து நமது மனதை அமைதியான மற்றும் தளா்வான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். தூக்க நேரத்தை பழக்கப்படுத்துதல் எப்போது தூங்க வேண்டும் என்பதைக் குறிந்து வைத்து, தினமும் அந்த குறித்த நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும். அதை நமது பழக்கமாகக் கொள்ள வேண்டும்.
அதன் மூலம் மிக எளிதாகத் தூங்கலாம். காஃப்பைன் கலந்த பானங்களைத் தவிா்த்தல் காஃப்பைன் மிக எளிதாக நமது தூக்கத்தைக் கெடுத்துவிடும். ஆகவே நல்ல தூக்கத்தைப் பெற வேண்டும் என்றால், காஃப்பைன் கலந்த பானங்களைத் தவிா்ப்பது நல்லது. அதன் மூலம் நல்ல தூக்கத்தைப் பெறலாம். உடற்பயிற்சிகளைச் செய்தல் சுறுசுறுப்புடன் இருந்தால், அது மன அழுத்தத்தைக் குறைத்து, நமக்கு நல்ல தூக்கத்தை வழங்கும்.
ஒருவேளை நமக்கு உடற்பயிற்சிகள் செய்வதில் ஆா்வம் இல்லை என்றால், நமது அறையில் சிறிது நேரம் நடப்பது நல்லது. மருத்துவ சிகிச்சை மற்றும் தியானம் தூக்கம் சாியாக வரவில்லை என்றால், அதற்கு முறையான மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவது நல்லது. அதே நேரம் தியானங்களில் ஈடுபட்டால், அது நம் மனதை அமைதிப்படுத்தி, நமக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.