எப்பொழுதும் உடற்பயிற்சி செய்யாதீங்க...
01 Jun,2021
ஓடுதல், கயிறு குதித்தல் (ஸ்கிப்கிங்), போன்றவை உயர் தாக்க ஏரோபிக் உடற்பயிற்சி என்று சொல்லலாம். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூற்றுப்படி இதயத்திற்கான உடற்பயிற்சியை நீங்கள் ஒரு வாரத்திற்கு 5-7 நாட்கள் வரை செய்யலாம். குறைந்தது 30 நிமிடங்கள் வரை செய்தால் போதுமானது. 10 நிமிடங்களுக்கு ஒரு முறை ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார்கள்.
நீங்கள் தினசரி 10 நிமிடங்கள் என்ற கணக்கில் 3 முறை நடைபயிற்சி செய்து வரலாம். இதனால் இதய நோய்கள், டயாபெட்டீஸ், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் வருவதை தடுக்கலாம். உங்களால் முடியும் என்றால் ஒரே ஒரு முறை என முழுவதுமாக 30 நிமிடங்களும் நடந்து வரலாம். அதே அளவிலான கலோரிகளை நீங்கள் இதிலேயும் எரிக்க முடியும்.
அமெரிக்க விளையாட்டு மருத்துவக் கல்லூரி என்ன சொல்லுகிறது என்றால் 30 நிமிடங்களை 10 நிமிடங்களாக பிரித்து 3 முறை நடக்கும் போது சீரான உடற்பயிற்சி ஆக இருக்கும். மேலும் இது உங்கள் இதய திறனை மேம் படுத்துகிறது. அதே நேரத்தில் உங்கள் எடையையும் பராமரிக்க முடியும்.
நீங்கள் இந்த ஏரோபிக் உடற்பயிற்சியை ஒவ்வொரு நாளும் கூட செய்து வரலாம். உங்களுக்கு இது பழக்கமாகி விட்டால் தொடர்ந்து செய்வதில் சிரமம் இருக்காது. இடையிடையே ஓய்வெடுக்க வேண்டிய அவசியம் வராது. அதுவே உங்களுக்கு மூட்டு வலி பிரச்சனைகள் இருந்தால் ரொம்ப கடினமான உடற்பயிற்சி செய்யாமல் இலே சான உடற்பயிற்சிக்கு மாற்றிக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் இடை இடையே ஓய்வும் எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் எவ்வளவு கடினமாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதை பொருத்து தான் உங்கள் பலன் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அதிலும் உங்களுக்கு என்று சில வரம்புகளை வைத்துக் கொள்ள வேண்டும். கண் மூடித்தனமாக எப்பொழுதும் உடற்பயிற்சி உடற்பயிற்சி என்று ஓடிக் கொண்டு இருக்கக் கூடாது.
அது நன்மை அளிப்பதை விட பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே உங்கள் குறிக்கோள்கள் என்ன, உடற்பயிற்சி வரம்புகள், நேரம், உடற்பயிற்சி நிலை இவற்றையெல்லாம் கொண்டு தான் உடற்பயிற்சியில் எவ்வளவு தீவிரமாக இறங்க வேண்டும் என்பதைதீர்மானிக்க வேண்டும்.