கொரோனா தொற்று காரணமாக, பல வித பக்க விளைவுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. காணப்படாத, அறியப்படாத பல விஷயங்களை நாம் எதிர்கொள்கிறோம். கடந்த சில நாட்களாக கோவிட் -19 நோயாளிகளில் Black Fungus
எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று காணப்படுகின்றது. கடந்த ஆண்டு டிசம்பரில், இதுபோன்ற சில பூஞ்ச்சை தொற்றால், சிலருக்கு கண்பார்வை பறிபோனது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்படி, இந்த நோய் அரிதானதாகவும் ஆபத்தானதாகவும் அறியப்படுகின்றது. இது மியூகோர்மைசீட்ஸ் எனப்படும் பூஞ்சைக் குழுவால் ஏற்படுகிறது. பொதுவாக இந்த பூஞ்சைகளின் குழு நம் சூழலில் காணப்படுகிறது.
Black fungus infections என்றால் என்ன
கொரோனா ( Coronavirus) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி அல்லது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளிகளில் Black fungus தொற்று காணப்படுகிறது.
ஒரு நோயை எதிர்த்துப் போராடுவதில் உடல் பலவீனமாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பொதுவாக ஏற்படுகிறது. வழக்கமாக நாம் உட்கொள்ளும் பலவித மருந்துகளால் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
Black fungus infections: அறிகுறிகள் என்ன
இந்த தொற்று ஏற்பட்டால், முகத்தில் உணர்வின்மை ஏற்படும். இது தவிர, மூக்கின் ஒரு பக்கத்தில் அடைப்பு ஏற்படும். கண் வலி மற்றும் வீக்கம் ஆகியவையும் ஏற்படும்.
யாருக்கு Black fungus ஏற்படும் வாய்ப்பு உள்ளது?
சர் கங்காரம் மருத்துவமனையின் ஈ.என்.டி துறையில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனீஷ் முஞ்சல், இந்த கொடிய நோய் சென்ற ஆண்டும் இருந்தது, இப்போது மீண்டும் வரத் தொடங்கியுள்ளது என்று கூறினார். இது கோவிட்-19 (COVID-19) நோய்த்தொற்றின் காரணமாக ஏற்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மியூகோமைசிசிஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் பற்றி தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு, இந்த நோயால் பலர் உயிர் இழந்தனர் மற்றும் பலருக்கு கண்பார்வை பறிபோனது. இது தவிர, சிலருக்கு மூக்கு மற்றும் தாடையில் தொற்று அதிகரித்து அந்த பாகங்களை அகற்ற வேண்டியிருந்தது.
நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு ஸ்டெராய்டுகள் வழங்கப்படுகின்றன என்று ENT துறையின் டாக்டர் அஜய் ஸ்வரூப் தெரிவித்தார். அத்தகைய நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது தவிர, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நோயாளிகளுக்கும் இந்த நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த நோய் ஆபத்தானதா?
இந்த நோய்க்கு அதிக நாட்களுக்கு சிகிச்சையளிக்கப்படாமல் இருந்தால், அது ஆபத்தானதாகலாம். கடந்த ஆண்டு, இந்த நோயால் அகமதாபாதில் 5 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்தது, சிலர் கொரோனா தொற்றுநோயிலிருந்து குணமடைந்திருந்தார்கள். இவர்களில் இருவர் உயிர் இழந்தனர், இருவருக்கு கண் பார்வை போனது.
இதற்கு என்ன சிகிச்சை
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் 50% பேர் இறப்பதாக நம்பப்படுகிறது. இருப்பினும், ஆரம்ப கட்டங்களில் நோய் அடையாளம் காணப்பட்டால், இதன் தீவிரத்தை வெகுவாக குறைத்து விடலாம். மூக்கடைப்பு, கண்கள் மற்றும் கன்னங்களில் வீக்கம், கருப்பு திட்டுகள் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் பயாப்ஸி மூலம் தொற்றுநோயைக் கண்டறிய முடியும் என்று டாக்டர் முஞ்சல் விளக்குகிறார். ஆரம்ப கட்டத்திலேயே பூஞ்சை காளான் தொற்றுக்கு சிகிச்சை தொடங்கப்பட்டால், நோயாளியின் உயிரைக் காப்பாற்றி விடலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.