வழக்கமாக நாம் விழித்திருக்கும் போது சரி தூங்கச் செல்லலாம் எனவும், தூங்கி கொண்டிருக்கும் போது சரி விழித்து கொள்ளலாம் எனவும் நமக்கு தோன்றுவதற்கு காரணம் நம் உடலுக்குள் இருக்கும் சர்காடியன் ரிதம் (Circadian Rhythm) என அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது. இதுவே உடலின் "உயிரியல் கடிகாரம்" என்றும் குறிப்பிடப்படுகிறது. ஐரோப்பியன் சொசைட்டி ஆஃப் கார்டியாலஜி (ESC) வெளியிட்டுள்ள ஒரு புதிய ஆராய்ச்சி, ஒருவரின் சொந்த இயற்கையான உடல் கடிகார ரிதத்திற்கு எதிராக செயல்படுவது அவருக்கு இதய பாதிப்பை ஏற்படுத்தும் எனபதை காட்டுகிறது.
ESC தடுப்பு இதயவியல் 2021-ல் வழங்கப்பட்ட இந்த புதிய ஆராய்ச்சி ஒரு நபரின் இயற்கையான உடல் கடிகாரத்திலிருந்து விலகலை ஏற்படுத்தும் வேலை நேரமானது, அவருக்கு இதய பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான ஆபத்துடன் தொடர்புடையது என்று கூறியுள்ளது. இந்த ஆய்வு குறித்து பேசியுள்ள போர்ச்சுகல் லிஸ்பன் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஆசிரியர் டாக்டர் சாரா காம்போவா மதிரா, ஆய்வில் பங்கேற்றவர்களின் வேலை நேரத்தில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் பணி அட்டவணை ஒரு பணியாளரின் உடல் கடிகாரத்துடன் ஒத்திசைவாக இல்லை என்பதை கண்டறிந்தோம். இதனால் இதய நோய் அபாயம் அதிகரிப்பதையும் பார்த்தோம் என்றார்.
ஆய்வில் தெரிய வந்த சில விஷயங்கள்:
* ஐரோப்பிய ஊழியர்களில் குறைந்தது 20% பேர் வித்தியாசமான நேரம் அல்லது ஷிப்டுகளில் வேலை செய்கிறார்கள்.
* சொந்த உடல் கடிகாரத்திற்கு எதிரான ஷிப்டுகளில் வேலை பார்த்த ஊழியர்கள் தீங்கு விளைவிக்கும் இதய கோளாறுகளை சந்தித்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
உடல் உழைப்பு இல்லாமல் அமர்ந்தே இருந்தாலும் கொரோனா வரும் - ஆய்வு
* முன்னதாக தூக்கக் கோளாறு மற்றும் ஆரோக்கியமற்ற நடத்தைகள் இதற்குக் காரணம் என்று கருதப்பட்டது.
* ஆனால் சர்காடியன் ரிதம் தவறாக போவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த ஆய்வில் கவனம் செலுத்தப்பட்டது.
* இதில் பங்கேற்றவர்களின் சோஷியல் க்ளாக் எடுத்துக்காட்டாக வேலை அட்டவணை மற்றும் அவர்களின் தனிப்பட்ட "உயிரியல் கடிகாரம்"(biological clock) ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
எவ்வாறு நடத்தப்பட்டது.?
* போர்ச்சுகலில் உள்ள ஒரு சில்லறை நிறுவனத்தின் விநியோகக் கிடங்குகளில் பணியூரிபவர்கள் உட்பட 301 ப்ளூ காலர் தொழிலாளர்கள் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டனர். இவர்களின் ஷிஃப்ட் நேரம் பொதுவாக அதிகாலை (காலை 6 மணி -3 மணி), மாலை ( 3 மணி-நள்ளிரவு) அல்லது இரவு (9 மணி முதல் காலை 6 மணி வரை)
* ஆய்வில் பங்கேற்ற தொழிலாளர்கள் அனைவரும் வயது, பாலினம், கல்வி, பணி அட்டவணை, சீனியாரிட்டி மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணிகள் அடங்கிய கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அவர்களின் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவிடப்பட்டது.
* இவர்களின் தூங்கும் நேரம் மற்றும் காலத்தை மதிப்பிட Munich Chronotype Questionnaire பயன்படுத்தப்பட்டது. இது ஒவ்வொரு நபரின் உள் உயிரியல் கடிகாரத்தையும் மதிப்பிட உதவியது. மேலும் இது ஒரு நபரின் உயிரியல் கடிகாரம் மற்றும் வேலை நேரங்களுக்கு இடையில் காணப்படும் பொருந்தா தன்மை குறித்து அளவிடவும் பயன்படுத்தப்பட்டது.
* 2 மணிநேரத்திற்கும் குறைவாக, 2-4 மணிநேரம், 4 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட என்று சோஷியல் ஜெட்லாக் மணிநேரங்களின் படி பங்கேற்பாளர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
ஆய்வு குறித்து மேலும் தகவல் தெரிவித்த டாக்டர் காம்போவா மதிரா, நம் அனைவருக்கும் ஒரு உள் உயிரியல் கடிகாரம் உள்ளது. ஒரு சிலர் அதிகாலை அல்லது காலை வேளையில் தூக்கத்திலிருந்து விழித்து கொள்வது, அதே போல இரவு சீக்கிரம் படுப்பது அல்லது ஆந்தை போல் விழித்திருந்து தாமதமாக தூங்குவது என்று வழக்கப்படுத்தி கொண்டிருப்பார்கள். இது ஒரு நபரின் இயற்கையான விழிப்பு மற்றும் உச்ச ஆற்றல் நேரம் என்ன என்பதை அவருக்கே காட்ட கூடியது. அலுவலக ஷிப்டு அல்லது வேறு காரணமாக வழக்கமாக பின்பற்றி வரும் இந்த உடல் கடிகாரத்தை மீறுவது ஆபத்தை ஏற்படுத்துகிறது.
சர்காடியன் ரிதம் தவறாக வடிவமைக்கப்படும் கோளாறு என்பது உங்கள் உடல் எதை விரும்புகிறது என்பதை பொறுத்தது. உதாரணமாக உங்கள் உடல் வழக்கம் போல இரவு 10 மணிக்கு தூங்க விரும்பும் போது, அதை செய்யாமல் நள்ளிரவு வரை அலுவலக வேலை அல்லது வேறு சில காரணமாக தொடர்ந்து அந்த நேரத்தில் தூங்க இயலாமல் போகும் போது உங்கள் சர்காடியன் ரிதத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றார். ஆய்வின் முடிவில் ஷிப்ட் வேலைக்கு இடையில் சர்க்காடியன் தவறாக வடிவமைக்கப்பட்டிருப்பது தீங்கு விளைவிக்கும் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. வித்தியாசமான பணி நேரங்களை கொண்ட பணியாளர்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்க அவர்களுக்கு நெருக்கமான கண்காணிப்பு தேவைப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது.