சிறுநீரின் நிறத்தினை வைத்தே நமது உடலில் நோய்கள் உள்ளதா என்பதை கண்டிபிடிக்க முடியாது.
சிறுநீரின் நிறம் அடர்த்தியாக மாறிக்கொண்டே இருந்தால், நமது உடம்பில் நீர்ச்சத்து குறைந்து கொண்டே வருகிறது என்பதைக் குறிக்கிறது. இதற்கு நாம் தினமும் அதிகமாக தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
நாம் ஒரு நாளைக்கு தண்ணீர் குடிக்கும் அளவு, நாம் உட்கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றை வைத்து, தான் நமது உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் நிறம் வேறுபாடுகள் அடைகிறது.
வெள்ளை நிறமுள்ள சிறுநீர்
நாம் சிறுநீர் கழிக்கும் போது, நல்ல தெளிவாக, நிறமே இல்லாமல் சிறுநீர் இருந்தால், அது சர்க்கரை நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
மேலும் தொடர்ச்சியான தாகம் மற்றும் தொடர்ச்சியான சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சர்க்கரை நோய்க்கான மற்ற அறிகுறிகளாகும்.
பழுப்பு நிறமுள்ள சிறுநீர்
பொதுவாக நமக்கு உடல் ரீதியாக வேறு விதமான பிரச்சனைகள் இருந்தால், சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேற்றப்படும்.
மேலும் நுரையீரல் நோய்கள் உள்ளவர்களுக்கு, சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேறலாம். இதனால் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்வது மிகவும் நல்லது.
சிவப்பு நிறமுள்ள சிறுநீர்
நம்முடைய சிறுநீரில் ரத்தம் கலக்கும் போது சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேற்றப் படுகிறது.
மேலும் சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், சிறுநீரக பாதையில் தொற்றுக்கள், கிட்னி மற்றும் சிறுநீர்ப்பைகளில் கற்கள், புரோஸ்டேட் அல்லது சிறுநீர்ப்பையில் புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
பச்சை நிறமுள்ள சிறுநீர்
சிலருக்கு உள் உறுப்பில் சீழ் போன்று இருந்தால், அவர்களுக்கு சிறுநீர் வெளியேறும் போது, பச்சை நிறத்தில் இருக்கும்.
மேலும் இதனால் சிறுநீரக பாதை தொற்றுக்கள், சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.
பால் நிறமுள்ள சிறுநீர்
நமது உடம்பில் நுண்ணிய ரத்தம் இருப்பதால் பால் நிறத்திலான சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் வெட்டை நோய் போன்ற பாலியல் ரீதியான நோய்கள் மற்றும் சிறுநீர் பாதையில் தொற்று, பித்தப்பை தொற்றுக்கள், கிட்னி கற்கள் போன்ற பிரச்சனைகளை இருப்பதாக அர்த்தமாகும்.
நுரை கலந்த சிறுநீர்
நுரை கலந்துள்ள சிறுநீர் மற்றும் அதில் புரதம் கலந்து வெளியேறினால், கிட்னி அல்லது பித்தப்பை பிரச்சனையாக இருக்கலாம்.
எனவே இந்த அறிகுறிகள் தொடர்ச்சியாக ஏற்பட்டால், மருத்துவரை நாடுவது நலம் பெயர்க்கும்.