ஆண்கள் பருவமடைவதை எப்படி கண்டறிவது..? என்னென்ன மாற்றங்கள் நிகழும்?
16 Jan,2021
கேள்வி : பெண்கள் பூப்படைந்தால் அதைக் கண்டறிய பல வழிகள் உள்ளன. ஆனால் ஆண்கள் பூப்படைந்தால் எப்படி கண்டறிவது..? என்னென்ன மாற்றங்கள் நிகழும்?
பதில் : ஆண்கள் பூப்படைந்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும், எந்த அறிகுறிகளை வைத்துக் கண்டறிவது என்பதற்கான தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. குழந்தைப் பருவத்திலிருந்து இளம் பருவத்திற்கு வளர்ச்சி அடைவதைத்தான் பூப்படைதல் என்று கூறுவார்கள். அடிப்படை அறிகுறிகள் என்பது ஆண் , பெண் என இரு பாலினத்திற்கும் ஒன்றுதான். சிலருக்கு அந்த அறிகுறிகள் தீவிரமாக இருக்கலாம்.
ஆண்கள் பூப்படைய 12 – 14 வயதில் சில அறிகுறிகளை முன் கூட்டியே கண்டறிய முடியும். அதில் முதல் அறிகுறிகள் முகத்தில் ஆங்காங்கே சில முடிகள் வளரத் தொடங்கும். ஆண்குறி வளர ஆரம்பிக்கும், ஆண்குறிகளைச் சுற்றிய சருமம் மென்மைத் தன்மையிலிருந்து கடினமானதாக மாறும்.
வருடங்கள் செல்ல செல்ல அதாவது 4-5 வருடங்கள் கடந்த பின் சில உடல் மாற்றங்கள் நிகழும். அதை வைத்து அவர்கள் பூப்படைந்துவிட்டார்கள் எனக் கண்டறியலாம். சின்ன சின்ன சுருள் முடிகள் கால், நெஞ்சுப் பகுதி என உடலில் வளரத் தொடங்கும். ஆண்குறிகளைச் சுற்றிலும் முடி வளரத் தொடங்கும். ஆண்குறி வளர்ந்து தோல் கடினமாக மாறும், அக்குள்களில் முடி வளரத்தொடங்கும். குரல் உடையும், குரலில் மாற்றம் உண்டாகும். பருக்கள் வரும், மீசை வளரும், உயரம் 7 அடி வரை அதிகரிக்கும். தூக்கத்தில் கனவு காண்பார்கள். அதில் செக்ஸ் கனவுகள் வரும், அதனால் தூக்கத்திலேயெ விந்தணுக்கள் வெளியேறும்.
அதன் பிறகு 4-5 வருடங்கள் கடந்ததும் இன்னும் உயரம் அதிகரித்து இளமைப் பருவத்திற்கான உடலமைப்பைப் பெறுவார்கள். ஆண்குறி நன்கு வளர்ந்து முதிர்ச்சி அடைந்திருக்கும். முடி நன்கு வளர்ந்திருக்கும். தாடி வரும் அளவிற்கு முகத்தில் முடி முளைக்கும். அவை தொட்டாலே கடினமானதாக இருக்கும்.
இவைதான் ஆண்கள் பருவமடைந்தால் தெரியும் அறிகுறிகள். இந்த விஷயத்தில் குறிப்பாக பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். அந்த சமயத்தில் அவர்களின் உணர்ச்சி மாற்றங்களுக்க்கு மதிப்பளிக்க வேண்டும். உளவியல் ரீதியான சில மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் மேலே குறிப்பிட்ட மாற்றங்களை பிள்ளைகளிடம் உணர்ந்தால் அதன் பிறகும் அவர்களை குழந்தைகளாக நினைக்காமல் அவர்களுக்கான சுதந்திரம் அளிக்க வேண்டும். இந்த உலகத்தில் அவர்களுக்கான பொருப்புகள், கடமைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். இது சற்று கடினமான விஷயம்தான். ஆனால் அப்படியே விட்டுவிட்டால் அவர்கள் பல மனநலப் பிரச்னைகளுக்கு உள்ளாவார்கள்.
தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும். மன அழுத்தம், பதட்டம், கோபம், மன ஒருநிலையின்மை போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆனால் இவை அனைத்தும் இளம் பருவத்தில் உண்டாகக் கூடிய சாதாரண அறிகுறிகள்தான். இந்த சமயத்தில் பெற்றோர்கள்தான் அவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். ஒருவேளை பெற்றோர்களால் சமாளிக்க முடியவில்லை எனில் மனநல ஆலோசகரிடம் அறிவுரை கேட்பது நல்லது.