கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்பட, வாய்ப்பு -ஆய்வில் தகவல்
27 Sep,2020
அமெரிக்க அறிவியல் இதழின், மருத்துவ ஆய்வுக் கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.
நைஜீரிய-அமெரிக்க கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஓஜோ அண்மையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் நலமடைந்தார். முழு உடல் நலம் தேறியபிறகு, கூடைப்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார்.
27 வயதான மைக்கேல் ஓஜோவின் திடீர் மரணம் குறித்து, மருத்துவர்கள் குழு, ஆராய்ந்தபோது, கொரோனாவால் பாதிக்கப்படும் போது, நுரையீரல் மட்டுமின்றி, இதயமும், ஒருவகையில் பாதிக்கப்படுவது தெரியவந்திருப்பதாக, அந்த ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.