கொரோனா யாரை பலி கொள்கிறது; சர்க்கரை, இருதய நோயாளிகள் கவனத்திற்கு..
18 Jul,2020
சதவீதம் பேர் அறுபது வயதை கடந்தவர்கள் ஆவர்.சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 1.3 சதவீதம் பேர் மரணத்தை தழுவுகின்றனர். மதுரையில் தினமும் 5 பேரை கொரோனா காவு கேட்கிறது. நேற்று முன் தினம் வரை மாவட்டத்தில் 129 பேர் பலியாகி இருந்தனர். பெரும்பாலானா இறப்பு மதுரை அரசு மருத்துவமனையில் நேர்ந்தது. இங்கு நடந்த இறப்புகளுக்கான காரணங்களை சிறப்பு டாக்டர் குழுவினர் ஆராய்ந்தனர். இதன் விபரம்:ஆண்கள் 78.9 சதவீதம்* ஜூலை 7 வரை மதுரை அரசு மருத்துவமனையில் 95 பேர் கொரோனா தாக்கி இறந்துள்ளனர். இதில் 74 பேர் ஆண்கள்.21 பேர் பெண்கள். அதாவது, ஆண்கள் 78.9, பெண்கள் 21.1 சதவீதம் பலியாகி இருக்கின்றனர்.* மொத்த இறப்பில் 72.63 சதவீதம் பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். அதாவது அறுபதை கடந்த 69 பேர் இறந்துள்ளனர். 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் 26 பேர்.* 75.4 சதவீதம் பேர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 24.6 சதவீதம் பேர் திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.* இதில் 66.2 சதவீதம் பேர் நகர் பகுதியில் வசித்தவர்கள். 33.8 சதவீதம் பேர் கிராமங்களை சேர்ந்தவர்கள்.இறப்பிற்கு காரணம் என்ன* நோய் அறிகுறியுடன் காணப்பட்டவர்கள் தான் அதிகம் இறந்துள்ளனர். இவர்களின் விகிதம் 95.4 சதவீதமாகும். அறிகுறியின்றி பலியானவர்கள் 4.6 சதவீதமாகும்.* குறிப்பாக இணைநோய்களால் அவதிப்பட்டவர்கள் தான் 82.8 சதவீதம் பேர் இறந்துள்ளனர். இறப்புக்கு கொரோனா மட்டுமே காரணமானவர்கள் 17.2 சதவீதம் தான்.* 35.5 சதவீதம் பேருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இணை நோய் இருந்துள்ளன. குறிப்பாக சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் ஆகிய இரண்டும் இணைந்தே இருந்தவர்கள் அதிகம்.* மொத்த இறப்பில் 59.6 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகள். 42.5 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டவர்கள், 18.8 சதவீதம் பேர் இருதய நோயாளிகள், 12 சதவீதம் பேர் நாட்பட்ட சிறுநீரக, நுரையீரல் நோய்கள், ஆஸ்துமா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.வீட்டிலேயே கவனம் தேவை:இது குறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த சர்வே முடிவை பார்த்தால் அரசு ஏன் முதியவர்கள், இணை நோய் இருப்பவர்களை வீட்டில் பத்திரமாக இருக்க சொல்கிறது என்பது புரியும். அவர்கள் மட்டும் வீட்டில் இருந்தால் போதாது.
அவர்கள் வசிக்கும் வீடுகளில் உள்ள மற்றவர்களும் அத்தியாவசிய தேவைத் தவிர வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகழுவ வேண்டும். வீட்டிற்கு திரும்பியதும் சோப்பால் 20 வினாடிகள் கைகளை தேய்த்துக் கழுவ வேண்டும்.