ஆபத்தை ஏற்படுத்தும் வெள்ளை சர்க்கரை ஏன்...?
02 Jul,2020
வெள்ளைச் சர்க்கரை, வெல்லம் இவை இரண்டுமே கரும்பில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. இதில், வெல்லத்தை நாம் எவ்வளவு எடுத்துக்கொண்டாலும், நம் உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது.
அதே நேரத்தில், வெள்ளையாக வர வேண்டும் என்பதற்காக அதிகளவில் ரசாயனம் சேர்த்துத் தயாரிக்கப்படும் வெள்ளை சர்க்கரை, உடலுக்குப் பலவிதத்தில் தீங்கை விளைவிக்கிறது.
உண்மையில், நம்முடைய உடல் எடை அதிகரிக்க அதிலும், தொப்பை உருவாவதற்கு இந்த சர்க்கரையே முக்கியக் காரணியாகத் திகழ்கிறது. அதிலும், மது அருந்துபவராக இருப்பின், தேனீர், காஃபி, இனிப்பு வகைகள் போன்றவற்றின் மூலம் அதிகளவில் வெள்ளைச் சர்க்கரையை எடுத்துக் கொள்வதுடன், போதிய உடற்பயிற்சியைச் செய்யாமல் இருந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, நீரழிவு நோய் ஏற்படுகிறது.
எனவே நாம் உண்ணும் உணவில் வெள்ளைச் சர்க்கரையை படிப்படியாகத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
ஆபத்தான வெள்ளை சர்க்கரையை தவிற்பது மிகவும் அவசியமாகிறது. ஆனால் இதனை உடனே நிறுத்தினால் தலைவலி, எரிச்சல், மூச்சுத்திணறல், அஜீரணம் தொடர்பான கோளாறுகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இவற்றில் இருந்து விடுபட, அதிக சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதும் மிக மிக அவசியம்.
உடல் பருமன் பிரச்சனை உள்ளவராக இருப்பின் அதனைக் குறைக்க முன்வரவேண்டும். அதற்குச் சரியான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு அவசியமாகிறது. ஏனெனில் நாம் உண்ணும் உணவுதான் நம்முடைய ஆரோக்கியத்திற்கும், கட்டுக்கோப்பான உடலமைப்புக்கும் அடித்தளம் அமைக்கிறது.
சோடா, குளிர்பானங்கள் போன்ற சர்க்கரை நிறைந்த பானங்களை முற்றிலும் தவிர்த்து விட்டு, அவற்றுக்குப் பதிலாக அதிகளவில் தண்ணீர் பருகுங்கள். காலையில், வெறும்வயிற்றில், ஒரு லிட்டர் தண்ணீரைப் பருகுவது வயிற்றில் உள்ள கழிவுகளை அகற்றிவிடும். மேலும் ரத்தத்தில் உள்ள கெட்ட கழிவுகள் வெளியேறவும் உதவும். சராசரியாக நாள் ஒன்றுக்கு நாம் 3 லிட்டர் தண்ணீர் பருகுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.