''கொரோனா வைரஸ், ஏழு நாட்களில் வீரியத்தை இழப்பதால், பரிசோதனையின்றி, 10 நாட்களில், 'டிஸ்சார்ஜ்' செய்யும் திட்டத்தை, மத்திய அரசு கையில் எடுத்துள்ளது,'' என, மதுரை சுகாதார பணிகள் துணை இயக்குனர், பிரியா ராஜ் தெரிவித்தார்.
கொரோனாவால் பாதித்தவர்கள், துவக்கத்தில் இரு வாரங்கள், மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்தனர். இரு முறை பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என்ற, முடிவு கிடைத்தால் மட்டுமே, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். சார்ஸ் வைரஸ்தற்போது மிதமான அறிகுறியுடன் அனுமதிக்கபட்டவர்களை, 10 நாட்களில், பரிசோதனையின்றி வீட்டிற்கு அனுப்பலாம், என மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்புதிய, டிஸ்சார்ஜ் திட்டத்தை, தமிழக அரசும் செயல்படுத்த துவங்கி உள்ளது.மதுரையில் இரு நாட்களில், 25 பேர் பரிசோதனையின்றி, 10 நாள் முடிந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
ஏழு நாட்கள் வீட்டுத் தனிமையை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து, மதுரை சுகாதார பணிகள் துணை இயக்குனர், பிரியா ராஜ் கூறியதாவது: கொரோனா குடும்பத்தில், இதற்கு முன் தோன்றிய சார்ஸ், மெர்ஸ் வைரஸ்களை விட, கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறதே தவிர, அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதுஇல்லை. சார்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், 15 சதவீதம் பேர் மரணத்தை தழுவினர். மெர்சால் பாதிக்கப்பட்டவர் களில், 37 சதவீதம் பேர் இறக்க நேரிட்டது. உலக அளவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரில் இறப்பவர்கள் விகிதம், 6.9 சதவீதம் தான். இந்தியாவில், 3.3 சதவீதமாக உள்ளது;
தமிழகத்தில், 1.5 சதவீதத்தை தாண்டவில்லை.விஞ்ஞானிகள் இவ்வைரஸ் பாதித்த அனைவருக்கும், தீவிர சிகிச்சை தேவையில்லை. 81 சதவீதம் பேருக்கு, அறிகுறியின்றி அல்லது, லேசான அறிகுறியுடன் தான், வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது. மேலும், 14 சதவீதம் பேருக்கு, மருத்துவமனை கண்காணிப்பு தேவை. 5 சதவீதம் பேருக்கு தான், 'வென்டிலேட்டர்' அல்லதுதீவிர சிகிச்சை தேவை என்பதை, சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
உறுதிகொரோனா வைரஸ், மனித உடலில் இருக்கும் காலம், இரண்டு முதல், 14 நாட்கள். உடலில் நுழைந்ததும், வைரசின் வீரியம் படிப்படியாக உச்சம் அடைகிறது. ஏழு நாட்களில், வீரியம் குறைந்து விடுகிறது. இதை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதி செய்துள்ளது. எனவே தான், பரிசோதனை இன்றி, டிஸ்சார்ஜ் செய்யும் திருந்திய திட்டத்தை அரசு அறிவித்து உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.