மூளையின் திறன் மேம்பட பயிற்சிகள்

15 Apr,2020
 

 

 
நம்முடைய விருப்பங்களில் நாம் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு முகப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் நம் மனதை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. அப்போதுதான் நாம் மனதை ஆளுகை செய்ய நல்ல திட்டங்களை தீட்ட முடியும். இதுபோன்ற எளிய பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மூளையின் திறன் நன்கு மேம்படும் என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்கள். மனதைக் கட்டுப்படுத்த முதல் பயிற்சியாக மூச்சை உள்வாங்கிக் கொண்டு ரிலாக்ஸாக உணர்ந்து, அதன்பிறகு வெளியிட வேண்டும். அதேபோன்று உங்கள் தசைகளை ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும். மேலும் உங்கள் தலை முதல் பாதம் வரை உங்களையே ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும். இதுவே உங்கள் மனதை ஒரு முகப்படுத்தும் முதல் உடற்பயிற்சியாகும்.
இப்படி ரிலாக்ஸ் செய்யும்போது ஒரு நேரத்தில் ஒரு பயிற்சியை மட்டும் செய்ய வேண்டும். எந்த தொந்தரவும் இல்லாமல், வேறு எந்த யோசனையும் இல்லாமல் இருப்பது அவசியம். இப்படியாக ஒரு வாரத்திற்கு 10 நிமிடமும், அடுத்த வாரத்திலிருந்து 15 நிமிடமும் தொடர்ந்து பயிற்சியை அதிகரிக்கலாம். இதன்மூலம் உங்கள் கவனம் வளர்ச்சி அடையும். முதல் பயிற்சியில் உங்களுக்கு மனது ஒருமுகம் அடைந்து, அதில் நீங்கள் சந்தோஷம் கிடைத்தால் உங்கள் கவனம் அதிகமாகி இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம். இதுபோன்ற பயிற்சிகள் எடுத்துக்கொள்வதற்கு உங்கள் மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நாட்கள், வாரங்கள், மாதங்கள் அல்லது சில மைல் கல் தூரம் கூட ேபாகலாம். உங்களுடைய முழு
கவனத்தையும், நீங்கள் எடுத்துக்கொள்ளும் பயிற்சியை தவிர வேறு எதிலும் செலுத்த கூடாது.
இந்த பயிற்சி எடுக்கும்போது ஒருவிதமான தூக்கம், பகல் கனவு அல்லது மற்ற யோசனைகளுக்கு இடம் கொடுக்க கூடாது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பயிற்சியை எடுத்துக் கொள்ளும்போது வேறுவிதமான சிந்தனைகள் எழுந்தால் பயிற்சியை நிறுத்திவிட்டு, முதலில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். பயிற்சியில் மனதை ஒருமுகப்படுத்த சிரமமாக இருக்கிறது என்றால் பயிற்சியின் நேரத்தை நீடித்துக் கொள்ளலாம் அல்லது மற்றொரு அமர்வையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். பயிற்சியின் தொடக்க காலத்தில் மனதை ஒரு மனப்படுத்த வேண்டும் என்று முயற்சி எடுத்தாலும் மனதை ஒரு மன படுத்துவது படிப்படியான முயற்சியினால்தான் முடியும். உங்கள் மூளை பதற்றம் அடையாமல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
Powered by wordads.co
Seen ad many times
Not relevant
Offensive
Covers content
Broken
Report this ad
மனதை ஒருமுகப்படுத்துவது கடினம் என்று உங்கள் எண்ணங்கள் திசை திருப்பினாலும் அதைக் குறித்து விரக்தியடைய இடம் கொடுக்கக் கூடாது. நீங்கள் இழந்த கவனத்தை மீண்டும் பெற காலப்போக்கில் மேற்கொள்ளும் இந்த பயிற்சியின் மூலம் நீங்கள் வெற்றி பெறும் வழியைக் கண்டுபிடித்து விடுவீர்கள். பயிற்சியின் மூலம் முழு கவனத்தை பெற முடிகிறது என்று உறுதியாக உங்களால் நம்பிய பிறகு இதையே தொடர்ந்து, மனதை முழு கவனத்துடன் எப்போதும் வைத்திருக்க, இந்த பயிற்சியின் முழு பலனையும் பெறலாம். கீழ்க்காணும் சில பயிற்சிகள் உங்கள் மனதை ஒருமுகப்படுத்த துணை செய்யும்.
பயிற்சி 1
ஒரு புத்தகத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு பத்தியை தேர்வு செய்து எத்தனை வார்த்தைகள் அதில்  இருக்கிறது என்று விரலால் எண்ணாமல் கண்களால் பார்த்து மனதளவில் எண்ண வேண்டும். அப்படி எண்ணிய பிறகு சரியாகதான் எண்ணினோமா என்று மறு கூட்டல் ெசய்து சரி பார்க்க வேண்டும். அப்படி சரிபார்த்த பிறகு சிறிது நேரம் கழித்து அடுத்த பத்தியையும் அதேபோன்று விரலால் அல்லாமல் கண்களால் பார்த்து  மனதால் எண்ணி பயிற்சி எடுப்பது முதல் நிலை பயிற்சி ஆகும்.
பயிற்சி 2
100 முதல் 1 வரை மனதை ஒருமுகப்படுத்தி தலைகீழாக சொல்ல வேண்டும். அதை கவனமாகவும் எண்ண வேண்டும்.
பயிற்சி 3
தலைகீழாக 100 இருந்து 0 வரை 3 எண்கள் தாவித் தாவி எண்ண வேண்டும். உதாரணமாக 100, 97, 94 என்று எண்ண வேண்டும்.
பயிற்சி 4
Powered by wordads.co
Seen ad many times
Not relevant
Offensive
Covers content
Broken
Report this ad
தன்னம்பிக்கை தரும் எழுச்சியூட்டும் வார்த்தைகளைத் தொடர்ந்து 5 நிமிடம் மனதளவில் சத்தமாக தொடர்ந்து சொல்ல வேண்டும். இப்படியாக தொடர்ந்து சொல்லும்போது 10 நிமிடத்தில் மனம் ஒருமுகம் அடைந்து தடையில்லா செறிவு(Uninterrupted concentration) கிடைக்கும். இதுபோன்ற பயிற்சிகள் தொடர்ந்து செய்தால்தான் மனம் ஒரு மனதுடன் கூடும்.
பயிற்சி 5
இந்த பயிற்சிக்கு பழங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆப்பிள், வாழைப்பழம் அல்லது ஏதேனும் ஒரு பழத்தை உங்கள் உள்ளங்கையில் வைத்து மூடிக் கொள்ளவும். மூடியிருக்கும் உள்ளங்கையில் இருக்கிற பழத்தின் மீது உங்கள் கவனத்தை செலுத்துங்கள். உங்கள் உள்ளங்கையில் இருக்கும் பழத்தை பற்றியும் அதன் தன்மையை பற்றியும் மட்டும் நினைத்து பாருங்கள் வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்கக் கூடாது. பழம் எங்கு விளைந்திருக்கும், பழத்தின் சத்து, அதன் பயன்கள் என வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடாமல், பழத்தை மட்டுமே மையமாக நினைத்து மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். பழத்தின் மீதே உங்கள் கவனம் செலுத்தியபடி இருக்க வேண்டும். பழத்தின் வடிவம், வாசனை, சுவை அந்த பழத்தை பற்றியான உணர்வு உங்களைத் தொட வேண்டும். அப்படி செய்யும்போது உங்கள் மனம் ஒருமுகத்தை அடையும்.
பயிற்சி 6
பயிற்சி ஐந்தில் மேற்கொண்ட அதே பழங்கள் அடிப்படையிலான பயிற்சியை இங்கும் எடுத்துக்கொள்ளலாம். கண் முன்னே ஒரு பழத்தை வைத்துக்கொண்டு, அந்த பழத்தைப் பற்றி 2 நிமிடம் ஆராய வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு பழத்தின் மணம், சுவை மற்றும் அதை தொடுவது போன்ற உணர்வு அனைத்தும் கற்பனையிலேயே மனதை ஒரு முகப்படுத்தி செய்ய அல்லது முயற்சி செய்ய வேண்டும். அப்படி கண்ணை மூடி பயிற்சியில் இருக்கும்போது சரியாக பழம் தெரியவில்லை என்றால் கண்ணை திறந்து பழத்தை 2 நிமிடம் பார்த்துவிட்டு மறுபடியும் கண்ணை மூடி பயிற்சியை தொடர வேண்டும். இப்படியாக செய்வதன் மூலம் மனம் ஒருமை பெறும் வழி வகுக்கிறது.
Powered by wordads.co
Seen ad many times
Not relevant
Offensive
Covers content
Broken
Report this ad
பயிற்சி 7
உங்கள் முன் கரண்டி, முள்கரண்டி அல்லது குவளை ஒன்றை வையுங்கள். இதில் ஏதேனும் ஒரு பொருளின் மீது கவனத்தை செலுத்தி மனதை ஒரு முகப்படுத்தவும். ஒருமுகப்படுத்திய பொருளை பற்றியான சிந்தனைகளுக்கு இடம் கொடாமல் அந்த பொருளையே உற்றுப்பார்த்து அதைப்பற்றியே கவனத்துடன் யோசிக்க வேண்டும். அப்படி செய்யும்போது மனது ஒரு முகப்படுத்தப்படும்.
பயிற்சி 8
மேலே குறிப்பிட்ட பயிற்சியில் நீங்கள் தேர்ச்சி அடைந்து விட்டால் அடுத்த பயிற்சிக்கு தயாராகலாம். ஒரு பேப்பர்  எடுத்துக் கொள்ளவும். அதில் சின்ன முக்கோணம், சதுரம் அல்லது வட்டம் என 3 அங்குலத்தில் வரைந்துகொள்ள வேண்டும். மூன்று வரைபடங்களையும் உங்களுக்கு பிடித்த வர்ணத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் வரைந்த அந்த படங்களை உங்கள் எதிரே உங்கள் கவனம்படும்படி வைக்க வேண்டும். நீங்கள் வரைபடம் வைத்த இடத்தில் வரைபடம் தவிர்த்து வேறு எதுவும் உங்களுடைய கவனச் சிதறல்கள் ஏற்படும் அல்லது கவனத்தை திசை திருப்பும் வேறு எதுவும் இல்லாமல் தவிர்க்க வேண்டியது அவசியம். அதாவது குறிப்பாக வேறு எதுவும் இருக்கக் கூடாது. கண்களுக்கு அந்த வரைபடத்தைப் பார்க்க அதிக கஷ்டம் கொடுக்காமல் 3 வரைபடங்களில் ஏதேனும் ஒன்றில் உங்கள் முழு கவனத்தை செலுத்தி அல்லது வைத்து அதையே பார்த்து பயிற்சி கொடுக்க ேவண்டும். அப்படி செய்யும்போது மனம் முழுவதும் ஒரே நிலையில் வந்து கூடுவதை உங்களால் உணர முடியும்.
பயிற்சி 9
பயிற்சி 8-ல் செய்த அதே பயிற்சியை இங்கும் தொடரவும். அதாவது எந்த வரைபடத்தை நீங்கள் பார்த்தீர்களோ, அதே  வரைபடத்தை கண்ணை மூடி பார்த்து பயிற்சி எடுக்க வேண்டும். ஒரு வேளை வரைபடத்தை மறந்துவிட்டால் கண்ணை திறந்து 2 நிமிடம் பார்த்துக் விட்டு, மீண்டும் கண்ணை மூடி வரைபடத்தை கண்முன்னே வைத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாமல், வேறு எந்த தொந்தரவுக்கும் இடம் இல்லாமல் அதை கண்முன்னே நினைத்து பயிற்சியை தொடர்ந்து செய்வதால் கவனச் சிதறல்களைத் தோற்கடிக்க முடியும்.
Powered by wordads.co
Seen ad many times
Not relevant
Offensive
Covers content
Broken
Report this ad
பயிற்சி 10
பயிற்சி 9-ல் செய்த அதே பயிற்சியை இங்கும் மேற்கொள்ளவும். ஆனால், கண்ணை திறந்து இந்த முறை பயிற்சியை செய்வதால் பலன் கிடைப்பதை உணர்வீர்கள்.
பயிற்சி 11
வேறு எந்த எண்ணங்களும், சிந்தனைகளும் இல்லாமல் குறைந்தது 5 நிமிடமாவது மனதை மௌனமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். குறைந்தது 5 நிமிடமாவது இந்த பயிற்சியை வேறு எந்த எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்காமல் முயற்சி செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்ட அனைத்து பயிற்சிகளும் சுலபமாக செய்த பிறகு வெற்றி கண்ட பிறகும் இதை தொடர்ந்து செய்ய ேவண்டும். மேலே குறிப்பிட்ட பயிற்சிகள் எடுத்துக் ெகாள்வதால் உங்கள் எண்ணங்களுக்கும் அமைதியை உணர்வதுடன், கூர்மையான கவனத்துடன் கூடிய மகிழ்ச்சியையும் உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிகையையும் நீங்கள் பெற முடியும்!

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies