3 முகமாக தாக்கும் கொரோனா
11 Apr,2020
கொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் காணப்பட்டது. ஒரு உயிரினத்தை கொரோனா வைரஸ் தாகும் போது. குறித்த உயிரினத்திற்கு ஏற்கனவே வேறு வைரஸ் தாக்கம் இருந்தால். இவை இரண்டும் கலந்து சக்திமிக்கதொரு வைரசாக உருவெடுக்கிறது. இதனை தான் ஆங்கிலத்தில் நோவல் கொரோனா என்று கூறுவார்கள். இதனை மியூட்டன் என்கிறார்கள். இந்த பரிணாம வளர்ச்சி காரணமாக Type B கொரோனா வைரஸ் உருவாகி. அது சீனாவின் வுகான் மாகாணத்தை தாக்கியுள்ளது.
அங்கே இருந்து வெளியேறிய மக்கள் சிலர் சிங்கப்பூர் சென்றவேளை. அது சிங்கப்பூரில் பரவ ஆரம்பித்து. அங்கே மீண்டும் மனித உடலில் அல்லது வேறு ஒரு உயிரினத்தில் மீண்டும் ஒரு பரிணாம வளர்ச்சி கண்டு TYpe C ஆக மாறியுள்ளது. இது டைப் B இன் மகள் என்கிறார்கள்.
இந்த Type C கொரோனா வைரசே மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இதுவே இத்தாலியில் பரவி பலரைக் கொன்றுள்ளது. லண்டன், ஜேர்மனி, பிரான்ஸ், கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள நபர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால். இந்த நாடுகளில் பரவும் கொரோனா வைரஸ் Type B என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதாவது நடுத்தர ஆபத்து கொண்டவை என்பது இதன் பொருள் ஆகும்.