20 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களிற்கு சர்வதேச நிபுணர்கள் விடுக்கும் செய்தி
18 Mar,2020
நீங்கள் 20 முதல் 50 வயதிற்குட்பட்டவர் என்பதால் உங்களை வைரஸ் தாக்காது என அலட்சியத்துடன் இருக்கவேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முதியவர்கள் கொரோன வைரசினால் அதிகம் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது என ஆய்வுகள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள நிபுணர்கள் குறிப்பாக நீரிழிவு நோய் இதய பாதிப்புகள் உள்ளவர்கள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் இளவயதினர் கொரோனாவைரசினால் கடுமையாக பாதிக்கப்படமாட்டார்கள் அல்லது உயிரிழக்க மாட்டார்கள் என தெரிவிக்க முடியாது அதற்கான சாத்தியமில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவிற்கான சமீபத்தைய விஜயத்தின் போது ஏனைய நோய் பாதிப்பற்ற பலர் மரணித்துள்ளதையும் ஆபத்தற்ற இளவயதினர் என கருதப்பட்டவர்கள் மரணித்துள்ளதையும் பார்த்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தை சேர்ந்த புரூஸ் அய்ல்வோர்ட் தெரிவித்துள்ளார்.
ஓன்றிற்கு மேற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 50 வீதத்திற்கும் குறைவாகவும் சில சந்தர்ப்பங்களில் 20 வீதத்திற்கும் குறைவாகவும் உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 30, 40 .50 வயதை சேர்ந்தவர்களும் மரணிக்கின்றனர் என மருத்துவர் அயில்வேர்ட் தெரிவித்துள்ளார்
இளவயதினர் கடுமையாக பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் குறைவாக உள்ளபோதிலும் குறிப்பிடத்தக்க அளவிலானவர்கள் மரணித்துள்ளனர் என மருத்துவரும் சுகாதார செய்தியாளருமான நோர்மன் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
சீனாவிலும் ஏனைய நாடுகளிலும் காணப்படும் கவலைதரும் நிலை இதுவென அவர் தெரிவித்துள்ளார்.
கொரோன வைரசினால் உயிரிழக்கும் 30 40 வயதானவர்களிற்கு வேறு நோய் பாதிப்புகள் இல்லாதமை தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.