கொரோனா வைரஸ் பாதித்தால் ஒருவரிடம் எத்தனை நாட்கள் இருக்கும்; சீன டாக்டர்கள் வெளியிட்ட தகவல்!
15 Mar,2020
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடிவருகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் பரவி இருந்தால் முதலில் தெரியாது. அது பாதித்த 14 நாட்களுக்கு பிறகுதான் அறிகுறிகளை காட்ட தொடங்கும்.
அதுபோல அதை குணப்படுத்திய பிறகும் சில நாட்களுக்கு அதன் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2 வாரங்களுக்கு கண்டிப்பாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது உலகம் முழுக்க மருத்துவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒருவரை கொரோனா பாதித்தால் அவரிடம் குறைந்தபட்சம் 37 நாட்கள் அது வீரியத்துடன் இருக்கும் என்று சீன டாக்டர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
20 நாட்களுக்கு பிறகுதான் அதன் அறிகுறி தெரியும். அதன் பிறகு 20 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சீன மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த காய்ச்சலில் இருந்து மீண்டு வர சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.