மூட்டு வலியை குணப்படுத்தும் நவீன சத்திரசிகிச்சை
26 Oct,2019
எம்மில் பலரும் மாற்றியமைத்துக் கொண்ட வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு பழக்கவழக்கத்தால் உடல் எடையை உயரத்திற்கு ஏற்ற வகையில் பராமரிப்பதில் பெரும் சவால் நிலவுகிறது.
90 சதவீதத்தினர் வைத்திய துறை பரிந்துரைத்த உடல் எடையைவிட 10 முதல் 30 கிலோ வரை எடை கூடுதலாகவே இருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு மத்திம வயதில் மூட்டுவலிக்கு முகம் கொடுக்கிறார்கள்.
அதே தருணத்தில் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள், மைதானத்தில் எதிர்பாராமல் நடைபெறும் விபத்துகளின் காரணமாக மூட்டை அசைக்க முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
இது போன்ற நிலையிலுள்ளவர்களுக்காக வைத்தியதுறை தற்போது Anterior Cruciate Ligament Reconstraction Surgery என்ற சத்திரசிகிச்சையை அறிமுகப்படுத்தி நல்லதொரு பலனை அளித்து வருகிறது.
மூட்டுகளில் பெரும்பான்மையான பகுதியை ஆக்கிரமித்திருக்கும் Anterior Cruciate Ligament =இவற்றில் ஏற்படும் பாதிப்புதான் மூட்டுவலி மற்றும் மூட்டை அசைக்க முடியாத நிலை உருவாகிறது.
இத்தகைய பாதிப்புள்ளவர்களை முப்பரிமாண தொழில்நுட்பத்தின் மூலம் மூட்டை துல்லியமாக பரிசோதனை செய்து, எம்முடைய தொடைப்பகுதியில் உள்ள Hamstrings Muscles என்ற தசைநார் பகுதியிலிருந்து, ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்து, இந்த மூட்டுகளில் பொருத்துவார்கள்.
அதன்பிறகு மூட்டுவின் இயக்கம் இயல்பாகி விடும். ஆனால் சத்திர சிகிச்சைக்கு பின்னரும், முன்னரும் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பயிற்சியையும், வைத்திய நடைமுறையும் உறுதியாகப் பின்பற்றவேண்டும். அப்போது தான் நல்ல பலன் கிட்டும்.