HH ரத்தப்பிரிவைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா
26 Oct,2019
எம்மில் பலருக்கும் குருதியைக் குறித்தும், அதன் பிரிவுகள் குறித்தும் கேட்டால், O. A. B. AB, என நான்கு வகையைச் சொல்வார்கள். ஆனால் இவர்கள் அறிந்திராத HH என்ற இரத்தப் பிரிவு ஒன்றும் இருக்கிறது.
ஓ பிரிவு குருதியை அனைத்து வகை இரத்தப் பிரிவினருக்கும் தானமாக வழங்க முடியும். அவர்களின் உடலும் இதனை ஏற்றுக்கொள்ளும். ஆனால் இந்த ரத்த பிரிவு உள்ளவர்களுக்கு, ஓ வகையினதான இரத்தத்தை ஏற்ற இயலாது. ஏனெனில் இத்தகைய ரத்த பிரிவு, மிகவும் அரிது.
சத்திரசிகிசையின் போது அல்லது இரத்த மாற்றுச் சிகிச்சையின் போது சிலருக்கு, சிலவகை இரத்த பிரிவுகள் ஏற்றுக்கொள்வதில்லை. இதற்கான பின்னணி என்னவென்று வைத்திய நிபுணர்கள் ஆராய்ந்தபோது தான், HH என்ற இரத்த பிரிவு இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த இரத்த பிரிவிற்கு ‘பாம்பே குரூப்’ என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகிறது.
ஏனெனில் இந்த வகையிலான இரத்த பிரிவு கண்டறியப்பட்டது தற்போது மும்பை என அழைக்கப்படும் பம்பாயில் தான். ஒரு மில்லியன் மக்களில் நான்கு பேர்களுக்குத் தான் இந்த இரத்த வகை இருக்கிறது. தெற்காசியாவில் இதுவரை 500க்கும் குறைவானவர்களே இந்த இரத்த பிரிவினர் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்த வகையான இரத்த பிரிவினருக்கு அவர்களின் குருதி தொகுதியில், ஏனைய இரத்த பிரிவுகளிலுள்ளது போன்ற ஆன்டிஜென்கள் இருக்காது. ஏ, பி, ஹெச் என்ற ஆன்டிபாடிஸ் மட்டும்தான் இருக்கும். இதனை பிளாஸ்மா சோதனையின் மட்டும்தான் என்ன வகை என்பதையும் துல்லியமாகக் கண்டறிய இயலும்.
அதனால் HH இரத்த பிரிவு உள்ளவர்கள் ஏதேனும் அவசரக் கால சிகிச்சைக்கு, அவர்களின் இரத்தம் பிரிவு தேவைப்பட்டால் முன்கூட்டியே அருகிலுள்ள இரத்த வங்கியுடன் தொடர்பு கொள்ள வேண்டும். அதே தருணத்தில் எந்தப் பிரிவு இரத்தத்தையும் 34 நாட்களுக்கு மேல் சேமித்து வைத்திருக்க இயலாது. அதன் காரணமாக HH இரத்த பிரிவு உள்ளவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆகையால் இவர்கள் எப்போது இந்த அரிய வகையானதான HH பிரிவு குருதி தேவைப்படுகிறதோ.. அப்போது மட்டுமே அவர்களை அழைத்து, இரத்தத்தைத் தானமாக பெறுகிறார்கள்.