நாற்பதைத் தொடும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல மாற்றங்கள்
27 Jul,2019
நாற்பதைத் தொடும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல மாற்றங்கள் குறித்துக் கேட்டால், பலரும் முதலில் சொல்வது மெனோபாஸைத்தான். இப்படி, பெண்களுக்கு ஏற்படுவதைப்போலவே ஆண்களுக்கும் சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். ‘ஆண்ட்ரோபாஸ்’ என்ற அந்தநிலை குறித்தும், அதற்கான
சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் ஆண்கள்நல மருத்துவர் ஷா துபேஷ்.
“பொதுவாக ஆண்ட்ரோபாஸ் குறித்துப் பெரிதாக யாரும் பேசுவதில்லை. ஆண்களின் உடலில் சுரக்கும் முக்கியமான பாலியல் ஹார்மோன் ‘டெஸ்டோஸ்டீரான்’ (Testosterone). இந்த ஹார்மோன் சுரப்பு குறைவதும், அதனால் ஏற்படும் சில பின்விளைவுகளுமே `ஆண்ட்ரோபாஸ்’ என அழைக்கப்படுகிறது. இதற்கு ‘மேல் மெனோபாஸ்’ (Male Menopause) என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. எந்த வயதில் வேண்டுமானாலும் இந்த ஹார்மோன் குறையலாம் என்றாலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், அவர்களுக்கு இது குறித்து அதிக விழிப்புணர்வு வேண்டும்.
மெனோபாஸ் Vs ஆண்ட்ரோபாஸ்
மெனோபாஸ், எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும். ஆனால் ஆண்ட்ரோபாஸ் அப்படியல்ல. சில ஆண்களுக்கு ஏற்படும்; சிலருக்கு ஏற்படாமலும் போகலாம்.
மெனோபாஸ் வருவது சீரான உடலியக்கத்தின் வெளிப்பாடு. எனவே, அதைத் தடுக்க பெண்கள் முயலக் கூடாது. அதிலிருந்து மீள சிகிச்சைகள் அவசியமில்லை. ஆண்ட்ரோபாஸ் அப்படியல்ல. குறிப்பிட்ட சில காலத்துக்கான பாதிப்பு அது. விழிப்புணர்வுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் அதைத் தவிர்த்துவிடலாம். பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும்கூட, அதன் வீரியத்தைப் பொறுத்து சிகிச்சைகளும், வாழ்வியல் மாற்றங்களும் பரிந்துரைக்கப்படும்.
மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு, பெண்களின் உடலில் இனப்பெருக்கத்துக்கான ஹார்மோன் சுரப்பு முற்றிலும் நின்றுவிடுவதால், அதற்கான சுழற்சியும் நடக்காது. ஆண்ட்ரோபாஸின்போது தங்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் குறைவை ஆண்கள் சிகிச்சைகள் மூலம் கடந்து, அவற்றை மீண்டும் சீரமைத்துக்கொள்வதால் அந்தக் காலகட்டத்துக்குப் பிறகும்கூட, அவர்கள் உடலில் இனப்பெருக்கச் சுழற்சிகள் இயல்பாக நடக்கும்.
அறிகுறிகள்
ஆண்ட்ரோபாஸின் அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடும் என்பதால், மற்ற உடல் உபாதைகளைப்போல அவற்றைப் பட்டியலிடுவது சாத்தியமில்லை. பொதுவான சில அறிகுறிகளைத் தெரிந்துகொள்வோம்.
வேலையில் பிடிமானம் இல்லாமல் போவது.
உடல் அடிக்கடி சூடாகும் நிலை (ஹாட் ஃப்ளாஷஸ்).
மனநிலையில் தடுமாற்றங்கள்.
அதீத சரும வறட்சி.
அடிக்கடி ஏற்படும் எரிச்சல் உணர்வு.
அடிக்கடி வியர்ப்பது.
அதீத மன அழுத்தம்.
தூக்கமின்மை.
தசைகள் வலுவிழத்தல்.
பாலியல் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடின்மை.
இவற்றில் ஏதேனும் ஓர் அறிகுறி பல நாள்களுக்குத் தொடர்ந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டு அன்றாட வேலைகளை மேற்கொள்வதிலேயே சிக்கல் ஏற்பட்டாலோ, தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஆண்ட்ரோபாஸ் பாதிப்பிலிருந்து மீள ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்ஸ
உணவு ஆரோக்கியம் அவசியம். மைதா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், வெள்ளை நிறத்திலுள்ள சாதம், பேக்கரி நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகளிலுள்ள ரசாயனங்கள் உயிரணுக்களின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடும்.
30 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், தினமும் 6 முதல் 8 கிலோமீட்டர் நடக்க வேண்டும். இதனால் உடலில் டெஸ்டோஸ்டீரான் அதிகம் சுரக்கும்; உயிரணு உற்பத்தி சீராகும்.
சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் தைராய்டு ஆகியவற்றின் அளவீடுகளை உடலில் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே இந்த அளவீடுகளில் பிரச்னை உள்ளவர்கள், கூடுதல் கவனம் எடுத்து மருந்து மாத்திரைகளைத் தவிர்க்காமல் உட்கொள்ள வேண்டும்.
35 வயதைத் தாண்டிவிட்டாலே, உப்பின் அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஏற்கெனவே ஆண்ட்ரோபாஸ் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அன்றாடம் ஒரு டீஸ்பூன் உப்பை மட்டுமே உணவில் பயன்படுத்த வேண்டும்.
மதுப்பழக்கம், புகைப்பழக்கம் கூடாது.
சிகிச்சைகள்
உயிரணு உற்பத்தி மற்றும் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அவை குறைவாக இருப்பது தெரியவந்தால், மருந்து மாத்திரைகள் அல்லது ஜெல் மூலமாகவே அவற்றின் உற்பத்தி அதிகரிக்கவைக்கப்படும். அதன் மூலம் அந்த ஆண் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்.
புராஸ்டேட் சுரப்பி (Prostate) மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை உறுதிசெய்த பிறகு தேவைப்பட்டால் ‘டெஸ்டோஸ்டீரான் ரீப்ளேஸ்மென்ட் தெரபி’