அடி வயிற்றுப் பகுதியில், கொழுப்பு
26 Jul,2019
மரபியல் காரணங்களால், அடி வயிற்றுப் பகுதியில், கொழுப்பு சேர்ந்து, உடல் பருமன் ஏற்படுகிறது. கார்போஹைட்ரேட், சர்க்கரை அதிகம் சாப்பிடும் போது, இன்சுலின் அளவு அதிகரித்து, ரத்த சர்க்கரையின் அளவு உயருகிறது; கல்லீரலில் கொழுப்பு சேருகிறது.
இதனால், உடல் பருமன், டைப் – 2 சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பது ஆகிய பிரச்னைகள் வரலாம்.
அதிகப்படியான உடல் எடையை, படிப்படியாக, ஆறு மாதங்களில், 5 – 10 சதவீதத்தைக் குறைத்தாலே, கல்லீரல் வீக்கம் குறையத் துவங்குகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும், கல்லீரல் வீக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை; வாரத்தில், நான்கு நாட்கள், தினமும், 400 கலோரி எடையைக் குறைத்தாலே நல்ல பலன் தெரியும்.
டைப் – 2 நீரிழிவு இருக்கும், 50 – 70 சதவீதம் பேருக்கு, கல்லீரல் வீக்கம் இருப்பது உறுதி ஆகியுள்ளது. 40 சதவீதம் பேருக்கு, உடல் உள் செயல்பாடுகளில் மாற்றம் உள்ளது. குழந்தைகள், இளம் வயதினர் மத்தியில், இந்தக் கோளாறு அதிகரித்து வருகிறது.