கழுத்து வலிக்குரிய சிகிச்சை
26 Jul,2019
எம்மில் பலர் தகவல் தொழில்நுட்ப துறை, ஊடகத்துறை மற்றும் சேவைத்துறைகளில் அதிகளவில் பணியாற்றுகிறார்கள். இவர்கள் நாளாந்தம் வாகனங்களில் அதிக தொலைவிற்கு பயணிப்பது, எட்டு மணிநேரத்திற்கும் மேலாக ஒரேயிடத்தில் அமர்ந்து பணியாற்றுவது. கணிணித்திரையை பார்த்துக் கொண்டே பணியாற்றுவது போன்ற வேலைகளில் வாழ்வாதாரத்திற்காக பாடுபடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கழுத்து வலி ஏற்படுகிறது.
கழுத்து வலி ஏற்பட்டால் உடனடியாக உங்களின் அனைத்து பணிகளையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு கட்டாய ஒய்வில் இருக்கவேண்டும். அப்போது தான் கழுத்து வலிக்கு நிவாரணம் கிடைக்கும். இதை மறுத்தால் வலி அதிகரித்து மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டியதிருக்கும்.
பொதுவாக தண்டுவடம் நான்கு பகுதியாக பிரிக்கப்பட்டு, அதில் முதல் பகுதியாக கழுத்து இடம்பெறுகிறது. இந்தப் பகுதியில் ஏழு எலும்புகளும், 8 நரம்புகளும் பிரதானமாக இருக்கின்றன. இந்தப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளால்தான் கழுத்து வலி ஏற்படுகிறது. கழுத்துப் பகுதியில் இருக்கும் நரம்பு, எலும்பு, ஜவ்வு பகுதி மற்றும் தண்டுவடத்துடன் இணைந்திருக்கும் அதன் பகுதி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுவதால் கழுத்து வலி வருகிறது.
கழுத்தில் உள்ள நரம்புகள், கழுத்து அசைவதற்கும், வலது மற்றும் இடது கைகளில் கால், கைகளின் அசைவு இருக்கும். இவற்றின் தொடு உணர்வு, பிடிமானம் ,அதன் உறுதித்தன்மை ஆகியவற்றை கழுத்திலுள்ள நரம்புகள்தான் வழங்கி வருகின்றன. அத்துடன் வியர்வையை வெளியேற்றும் மற்றும் வியர்வையைக் கட்டுப்படுத்தும் நரம்புகளும் கழுத்தில் தான் இருக்கின்றன. சுவாசிக்கும் காற்றையும் கழுத்தில் உள்ள நரம்புகள் தான் கட்டுப்படுத்துகின்றன இதன் காரணமாகவே கழுத்தில் உள்ள நரம்புகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
கிருமி தொற்று, கழுத்து நரம்புகளின் ஏற்படும் இயல்பை மீறிய அழுத்தங்கள் மற்றும் கழுத்து தசைப் பகுதிகளில் ஏற்படும் விரிசல், இதன் காரணமாகவே வலி ஏற்பட்டு, அறிகுறியை வெளிப்படுத்துகிறது. இதற்கு பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகள், பிசியோதெரபி, அதன்பிறகு சத்திரசிகிச்சை ஆகிய, ஆகியவற்றின் மூலம் கழுத்து வலியை குணப்படுத்தலாம்,
கழுத்து வலியால் பாதிக்கப்பட்டு பரிசோதனைக்குப் பின்னர் அங்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் அதற்குப் பிறகு குறைந்தபட்சம் மூன்று மாத காலம் மருத்துவர்களின் பரிந்துரையை அவர்கள் உறுதியாக பின்பற்ற வேண்டும். இதன் போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இயன்முறை சிகிச்சை மற்றும் பயிற்சியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
இத்தகைய சத்திரசிகிச்சையின் போது எம்முடைய உடலிலிருந்து எலும்புகள் வெட்டி எடுத்து அங்கு வைப்பதைக் காட்டிலும், செயற்கையாக தயாரிக்கப்பட்ட வலிமை வாய்ந்த உறுதியான எலும்புகள் அங்கே பொருத்தப்படுகின்றன. இத்தகைய செயற்கை உறுப்புகள் அங்கே எந்த அளவிற்கு அழுத்தத்தை தாங்க வேண்டுமோ அதனை தாங்குவதால் பெரும்பாலானவர்கள் செயற்கை எலும்புகளை அங்கே பொருத்துவதை பொருத்துவதற்கு முன்னுரிமை வழங்குகிறார்கள்