உணவுக்குழாயில் ஏற்படும் பாதிப்பிற்குரிய சிகிச்சை முறை
09 Jul,2019
வாயில் உள்ள பற்களிலிருந்து வயிற்றிலுள்ள இரைப்பை வரை 40 சென்டிமீற்றர் நீளம் கொண்ட உணவுக்குழாய்க்குள் ஏதேனும் துகள்கள் அசௌகரியங்கள் அமிலத்தின் தாக்கங்கள் இருந்தால் அதனை எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். அதனைத் தொடர்ந்து சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
உணவுக்குழாய்க்கும், நுரையீரலுக்கும் இடையே ஒரு வழிப் பாதையை உடைய ஒரு வால்வு அமைந்திருக்கிறது. இந்த வால்வு வழியாக உணவுகள் இரைப்பைக்கு செல்லுமே தவிர இரைப்பையிலிருந்து இந்த வால்வை மீறி உணவுகள் மற்றும் உணவுத் துகள்கள் உணவுக்குழாயிற்குள் வராது. ஏதேனும் சில காரணங்களால் இந்த வால்வு சிலருக்கு பலவீனமாக இருந்தால், அவருக்கு நெஞ்செரிச்சல் அல்லது Non cardiac chest pain எனப்படும் இதயபாதிப்பு அல்லாத நெஞ்சு வலி வருவது வருவதற்கு வாய்ப்புண்டு.
உடல் எடை அதிகமாக இருப்பது, அதிக அளவில் கோப்பியோ அல்லது ஐஸ்கிறீமோ சாப்பிடுவது, அதிக அளவில் புகைப்பிடிப்பவர்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்படக்கூடும். சிலர் இரவில் உறங்கும் பொழுது இறுக்கமான ஆடையணிந்து உறங்குவார்கள். இதன் காரணமாகவும் இந்த வால்வு பலவீனமடையும்.சிலருக்கு உணவுத் துகள்கள் உணவுக்குழாயில் பயணித்து, நுரையீரலை கூட அடைந்துவிடும். அத்தகைய தருணத்தில் அவர்கள் அதனை வறட்டு இருமல் மூலம் வெளிப்படுத்துவார்கள். பொதுவாக உணவுக்குழாய்க்குள் உணவுத் துகள்கள் இருந்தால் அதன் முதல் அறிகுறி, வாய் துர்நாற்றம் தான்.
சிலருக்கு வறட்டு இருமல் தொடர்ந்து இருந்தால், இருமலுக்குரிய சிகிச்சையைப் பெறுவதைக் காட்டிலும், அவர்களுக்கு இந்த வால்வு பலவீனமாக இருக்கிறதா? இல்லையா? என்ற பரிசோதனையை செய்து, அதனை வலிமைப்படுத்தும் சிகிச்சை மேற்கொண்டால் வறட்டு இருமல் குணமாகும்.