ஹைப்போதைராய்டு VS ஹைப்பர்தைராய்டு
28 Jun,2019
நம் உடலில் கழுத்துப் பகுதியில் காணப்படும் சிறிய வகை நாளமில்லா சுரப்பியே தைராய்டு. அதில் சுரக்கும் தைராய்டு ஹார்மோன் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தி இதயம், செரிமான மண்டலத்தின் செயல்பாடுகள், தசைகளின் வலிமை, மூளை வளர்ச்சி, சீரான மனநிலை, எலும்புகளின் ஆரோக்கியம் ஆகியவற்றை நிர்வகிக்கிறது. தைராய்டு சுரப்புக் குறைபாட்டில் ஹைப்போதைராய்டு, ஹைப்பர்தைராய்டு என இரண்டு வகைகள் உள்ளன.