இதய அடைப்பை சீராக்க உதவும் நவீன சிகிச்சை முறை
02 Jun,2019
இதயப் பாதிப்புள்ளவர்களுக்கு தற்போது artery clearance therapy என்ற சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருகிறது.
எம்மில் பலரும் தற்போது குறைந்த அளவிலோ அல்லது ஏதேனும் ஒரு அளவிலோ இதய பாதிப்புடன் வாழத் தொடங்கியிருக்கிறோம். இந்நிலையில் இதயப் பாதிப்புடன் வைத்தியசாலைகளுக்குச் செல்பவர்களை, வைத்தியர்கள் CT Angio 700 Slice என்ற கருவியின் மூலம் நோயாளிகளின் இரத்த குழாய்களில் எவ்வளவு அடைப்புகள் இருக்கிறது? என்பதையும், அதன் தன்மையையும் தெரிந்து கொள்வார்கள்.
அத்துடன் Double Vessel Disease. Triple Vessel Disease உள்ளவர்கள், 100 சதவீத அடைப்பு உள்ளவர்கள், சத்திர சிகிச்சைக்கு விருப்பம் இல்லாதவர்கள், பல்வேறு காரணங்களால் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாதவர்கள், சத்திர சிகிச்சைக்கு பின்னரும் குணம் அடையாதவர்கள் என அனைவருக்கும் அவர்களின் பாதிப்பைப் பொறுத்து EECP, HBOT, ACT என மூன்று வகையினதான சிகிச்சையை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ அளித்து குணப்படுத்துவார்கள்.
இதில் மூன்றாவதாக பரிந்துரைக்கப்படும் artery clearance therapy என்றொரு சிகிச்சையின் போது, நோயாளிகளின் நரம்புகளின் வழியாக ஒரு திரவத்தைச் செலுத்துவார்கள். இந்த திரவம் அமினோ ஆசிட்ஸ் மற்றும் மல்ட்டி விற்றமின் சத்துகளால் செறிவூட்டப்பட்டது. இந்த திரவம் இரத்த நாளங்களின் வழியாக உடலுக்குள் சென்றவுடன், அங்கு தங்கியிருக்கும் உலோக அசுத்தங்களை வெளியேற்றிவிடும்.
உதாரணமாக அடைப்பிற்கு காரணமாகத் திகழும் கால்சியத்தை இரத்த குழாய்களின் சுவர்ப்பகுதிகளிலிருந்து கரைத்து வெளியேற்றிவிடும். இதனையடுத்து இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் சீரடையும். இரத்த ஓட்டம் சீரடைந்தால் இதயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.