தாடி வளர்க்கும் ஆண்களுக்கு நோய்நொடி வீடுதேடிஓடி வரும் – அதிர்ச்சியில் ஆண்கள்
22 May,2019
முன்பெல்லாம் ஆண்கள், தாடி வளர்ப்பது சில மதத்தில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பிற சமுகத்து ஆண்கள், ஃபேஷனுக்காக வைப்பார்கள், சிலர் காதல் தோல்வியின் அடையாளமாக வைப்பார்கள், இன்னும் சிலர் துறவம் பூணும்போது அதன் அடையாளமாக வைப்பார்கள். ஆனால் இந்த தாடியை வைத்து சுவிட்சர்லந்தைச் சேர்ந்த Hirslanden மருத்துவ நிறுவனம் ஆய்வு ஒன்று நடத்தி இருக்கிறது.
அந்த ஆய்வில் நாய்களின் தோலையும் மனிதர்களின் தாடியையும் ஒப்பிடுகையில் ஆண்களின் தாடியில்தான் அதிக நுண்ணுயிர்கள் மற்றும் கிருமிகளின் இருப்பிடமாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்தது.
ஆம் தாடி வைத்த 18 ஆண்களும் 30 நாய்களும் பங்குபெற்ற இந்த ஆய்வில், அனைத்து ஆண்களின் தாடிகளில்தான் நுண்ணுயிர்கள் மற்றும் கிருமிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகக் கண்டு அறியப்பட்டுள்ளது. ஆகவே ஆண்கள் தாடி வளர்ப்பது கடினமான வேலை என்றாலும் தாடியைச் சுத்தமாக பராமரிப்பது அதைவிடக் கடினமான வேலை. ஆகவே தாடி வைத்திருக்கும் ஆண்கள், தங்கள் தாடியை சுத்தமாக பராமரிக்காமல் விட்டுவிட்டால், தாடியில் உள்ள நுண்ணுயிர்களாலும் கிருமிகளாலும் நோய்நொடி உங்கள் வீடு தேடி ஓடிவந்து உங்களைப் பற்றிக்கொள்ளும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.