கோடைவெயில் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதுஸ ஏன் தெரியுமா..?
13 May,2019
வெயில் உங்களைச் சுட்டெரிக்கிறதா ? வெயிலைச் சமாளிக்கமுடியாமல் கடுமையாக சாடுகிறீர்களா ? கண்டிப்பாக வேலைக்குச் செல்வோர் முதல் ஏதேனும் முக்கியப் பயணங்கள் செல்வோருக்குத்தான் வெயிலின் தாக்கம் தெரியும். அதை நீங்கள் எரிச்சலாக உணர்கிறீர்கள்.
உண்மையில் அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா?
இயற்கை வழியில் விட்டமின் D கிடைக்கும் : தினசரி படும் வெயிலால் தினமும் உங்களுக்கு விட்டமின் D சத்துக் கிடைக்கும். இதனால் உங்கள் எலும்புகள் உறுதியாகுதல், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்தல், இதர நோய்த் தொற்றுகள் இல்லாமல் இருப்பீர்கள்.
வெயில் காலப் பழங்களின் நன்மைகள் :
வெயில் காலத்தில் மட்டும்தான் சில பழங்களை உண்ண முடியும். அதாவது நீர்ச் சத்து நிறைந்த தர்பூசணி, மாம்பழம், வெள்ளரி, முலாம் பழம், பெர்ரி வகைகள், கிவி, ஆரஞ்சு போன்ற பழங்கள் அதிகமாகக் கிடைக்கும். நாமும் வெயிலைச் சமாளிக்கக் கட்டாயம் உண்போம். இதனால் உடலுக்கு விட்டமின் C மற்றும் E கிடைக்கின்றன. இது தவிர இதர மினரல்ஸுகளும் கிடைக்கின்றன. குறிப்பாக மாம்பழத்தில் பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
வியர்வை வழிதலும் நல்லதே :வெயில் காலத்தில் எப்பேர் பட்டோருக்கும் வியர்வை வரும். அந்த வியர்வை வெறும் உப்பு நீர் மட்டுமல்ல. அது உடலின் கிருமிகள், அழுக்குகள், தேவையில்லாத கொழுப்பு , எண்ணெய் போன்றவற்றை நீக்குகிறது. உடலைத் தூய்மையாக்குகிறது. ஒரு ஆய்வில் வியர்வையில் ஃபீல் குட் உணர்வை அளிக்கக் கூடிய எண்டோர்ஃபின் அமிலம் சுரப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இயற்கை தெரபி : 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வில் 30 நிமிடங்கள் வெயிலில் இருந்தால் இரத்தக் கொதிப்பு குறையும் எனவும் மன அழுத்தம் நீங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்மர் வெக்கேஷன்களும் ஆரோக்கியமானதே : சம்மரில் வெக்கேஷன் செல்வதால் தொடர் சளிப்பான வாழ்க்கைக்கு ஒரு பிரேக் கிடைத்ததைப் போன்று இருக்கும். இது மன அழுத்தத்தைக் குறைத்து வெக்கேஷனுக்குப் பின் தொடங்கும் வேலையில் சுறுசுறுப்பும், கற்பனைத் திறனும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே சம்மர் வெக்கேஷன் செல்லுங்கள் எனவும் அறிவுறுத்துகிறது.
ஆரோக்கியமான இதயம் கிடைக்கும் : பொதுவாக இதய நோய் விண்டரில்தான் அதிகமாகும். அதற்கு எதிராக வெயில் பருவத்தில் இதய நோய்கள் குறையும். மேலும் இதுபோல் சம்மரின் ஏற்படும் உடல் ஆரோக்கியம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.