ஆயுர்வேத சிகிச்சைகள் சிறுநீரக வியாதிகளுக்கு பலன் தரும் - ஆய்வு முடிவுகள்
02 Apr,2019
இந்திய ஆராய்ச்சியாளர்களால் சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட இரண்டு தனித்தனி ஆய்வு அறிக்கைகளில் சிறுநீரக வியாதிகளுக்கு 'புனர்நாவ' என்ற இந்திய மூலிகை பலன்தரும் என கூறப்பட்டு உள்ளது.இந்த மூலிகை கிட்னி நோயை தடுக்கவும் ,கிட்னி நோயை குண்படுத்தவும் உதவுகிறது என அதில் கூறப்பட்டு உள்ளது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தால் (BHU) மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு உலகின் மருத்துவ ம்னற்றும் மருத்துவ் அறிவியல் பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் கிட்னி நோய் பாதிப்பு உள்ள ஒரு பெண்ணுக்கு 'புனர்நவா' மூலிகை மூலம்தயாரிக்கப்பட்ட மருந்தை ஒருமாதம் கொடுத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.
இந்த மருந்து மூலம் அவரது இரத்தத்தில் கிரியேட்டின் அளவு மற்றும் யூரியா அளவு ஒரு ஆரோக்கியமான அளவிற்கு கணிசமாக குறைந்துவிட்டது என்று கண்டறியப்பட்டது. அது மட்டுமல்லாமல் அவருடைய ஹீமோகுளோபின் அளவும் முன்னேற்றம் அடைந்து உள்ளது. இதை தொடர்ந்து எனவே, பூநர்ணாவை அடிப்படையாகக் கொண்ட மருந்துகள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துவதாகவும் முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து புனர்நவா மூலிகை சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் ஹீமோகுளோபின் அளவைஅதிகரித்து உள்ளதாக முடிவுசெய்யப்பட்டது.
இதேபோல், அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மருந்தியல் ஆராய்ச்சி பத்திரிகையில் வெளியான மற்றொரு ஆய்வு கட்டுரையில் தாமரை இலைகள், பாதார்ச்சர் மற்றும் பிற முக்கிய மூலிகைகள் உள்ளிட்ட புனர்நவா அடிப்படையிலான மூலிகைப் பொருட்களின் செயல்திறனைப் பற்றி கூறப்பட்டு உள்ளது.
சிறுநீரகங்கள் இழையவியல் அளவை இந்த மருந்து பராமரிக்க உதவியது என்று கண்டறியப்பட்டது. சிரப் (நீரி KFT) ஒரு சக்தி வாய்ந்த நரம்பு ஊக்கமளிப்பு உருவாக்க மருந்து ஆகும்
இதுகுறித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழக துறை தலைவர், பேராசிரியர் கே.என். திவேதி, கூறியதாவது:-
நீரி கெப்ட் (Neeri KFT) இல் உள்ள மூலிகைச் சூத்திரங்கள் ஓரளவுக்கு டயலசிஸிற்கு மாற்றாக இருக்கலாம். வாழ்க்கை மாற்றங்கள் காரணமாக அதிகரித்து வரும் இந்த் வேலிஅயில் இப்போது ஆயுர்வேத மருந்துகளில் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஒரு உலகளாவிய தொற்றுநோய் ஆகும். உலக அளவில் கிட்டத்தட்ட 850 மில்லியன் மக்கள் பல்வேறு காரணங்களால் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்,. நாள்பட்ட சிறுநீரக நோயால்(CKD) வருடத்திற்கு 2.4 மில்லியன் மக்கள் மரணமடைகின்றனர். உலகளாவிய இறப்புக்களின் முதல் ஐந்து காரணங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இந்த நோயால் இந்தியாவில் 10 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு மிகவும் பொதுவான காரணம் நீரிழிவு நோய் ஆகும், இது நாள்பட்ட சிறுநீரக நோயில் 55-60 சதவீதம் வரை பங்களிப்பு செய்கிறது.