கால் ஆணி
கால் பெருவிரலில் வீக்கம், வியர்வை சுரப்பி பாதிப்பு, காலில் வடுக்கள் மற்றும் மருக்கள் உள்ளவர்களுக்கு கால் ஆணி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, காலில் இரத்த ஓட்டம் குறைவதால், ஆணி ஏற்படும் வாய்ப்பு அதிகம். இப்படிப்பட்ட சூழலில், ஒரு மருத்துவரை சந்தித்து வைத்தியம் பார்ப்பது நல்லது.
தடித்த கடினமான தோல், உப்பிய புடைப்புகள், அழுத்தும்போது வலி ஆகியவை கால் ஆணியின் அறிகுறிகள். அவை நிற்கும்போதும் நடக்கும்போதும் கூட மிகுந்த அசௌகரியத்தை உண்டு பண்ணும்.
பொதுவாக, அழுத்தம் அதிகம் கொடுக்காமல் இருந்தால், ஆணி தானாகவே சரி ஆகி விடும். தேவைப்பட்டால், நிறைய மருந்துகள், லோஷன்கள், கார்ன் கேப் (corn cap) போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். கால் ஆணிக்கு வீட்டிலேயே எளிய முறையிலும் சிகிச்சை செய்து கொள்ளலாம்.
படிகக் கல்
ஆணியையும் அதை சுற்றி உள்ள பகுதியையும் படிகக் கல்லால் மசாஜ் செய்வது நல்ல தீர்வை தரும். படிகக் கல், இறந்த மற்றும் தடிமனான தோலை நீக்கி, வலியை குறைத்து சீக்கிரம் குணமாக உதவுகிறது.
1. தூங்கபோவதற்கு முன், கால்களை வெந்நீரில் 10 நிமிடம் வைக்கவும். இதனால் தடிமனான தோல் மென்மையாகும்.
2. காலில் ஆணி உள்ள இடத்தில் படிகக்கல்லை வைத்து 3 முதல் 5 நிமிடங்கள் வரை மென்மையாக மசாஜ் செய்து, பின்பு கால்களை உலர விடவும்.
3. சிறிது பஞ்சை ஆமணக்கு எண்ணெயில் நனைத்து, ஆணி மீது வைத்து, அதன் மீது டேப் ஒட்டி, இரவு முழுவதும் விடவும்.
4. அடுத்த நாள் காலையில் கட்டை பிரித்து, பல முறை ஆமணக்கு எண்ணெய் தேய்க்கவும்.
5. ஆணி முழுவதும் சரி ஆகும் வரை இதை திரும்ப திரும்ப செய்யவும்.
வெள்ளை வினிகர்
கால் ஆணிக்கு, வெள்ளை வினிகர், ஒரு சிறந்த, சோதனை செய்யப்பட்ட நிவாரணி ஆகும். இது, தடிமனான தோலை மென்மை ஆக்குகிறது. மேலும் அதன் ஆண்டிபங்கல் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் நோய்த்தொற்றின் அபாயத்தை குறைக்கின்றன.
1. படுக்கைக்கு செல்வதற்கு முன் ஒரு பங்கு வெள்ளை வினீகருடன் மூன்று பங்கு தண்ணீர் சேர்க்கவும்.
2. இந்த நீர்த்த வினிகர் கலவையை ஆணியின் மீது தடவவும்.
3. அந்த இடத்தை நன்கு கவர் செய்து, இரவு முழுவதும் விடவும்.
4. அடுத்த நாள் காலையில் கட்டை தளர்த்தி, தோல் மீது, படிகக்கல் அல்லது உப்பு காகிதத்தை வைத்து தேய்க்கவும்.
5. சிறிது ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி அந்த இடத்தை சற்று ஈரப்படுத்தவும்.
6. ஆணி உதிர்ந்து வரும் வரை இதை செய்யவும்
சுகம் கூடுமா குறையுமா?
சமையல் சோடா
பேக்கிங் சோடா, இறந்த செல்களை இயற்கையாக உதிர வைக்கும் தன்மை கொண்டது. இது ஆணியையும் அதனை சுற்றியுள்ள இறந்த செல்களையும் உதிரவைப்பதுடன், ஆண்டிபங்கல் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் கொண்டுள்ளதால், நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
1. சூடான நீரில் இரண்டு தேக்கரண்டி சமையல் சோடா சேர்த்து, கால்களை அதில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கவும். ஆணி உள்ள இடத்தில் படிகக்கல் வைத்து தேய்த்து காய்ந்த தோலை எடுக்கவும்.
2. மற்றொரு முறை – ஒரு தேக்கரண்டி சமையல் சோடா, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்யவும். கவனமாக இதை ஆணி உள்ள இடத்தில் தடவவும். ஒரு பேண்டேஜ் வைத்து கட்டி இரவு முழுவதும் விடவும். அடுத்த நாள் காலையில், கட்டை பிரித்து அந்த பேஸ்டை மிதமான சுடுநீரில் கழுவி, காய்ந்த தோலை படிகக்கல் வைத்து தேய்த்து உதிர்க்கவும்.
எலுமிச்சை
எலுமிச்சை, வீட்டிலேயே கால் ஆணி பிரச்சனையை சரி செய்ய மற்றுமொரு சிறந்த நிவாரணி. ஆணியை ஏற்படுத்தும் தடிமனான தோலை, எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மிருதுவாக்குவதால், இறுதியில் அது உதிர்ந்து விழுந்து விடுகிறது.
1. ஆணியின் மீது, பிரெஷ் எலுமிச்சை சாறு விட்டு, அதை காய விடவும். நாளொன்றுக்கு மூன்று முறையாவது இதை செய்யவும்.
2. இதற்கு மாற்றாக, ஒரு தேக்கரண்டி பிரெஷ் எலுமிச்சை சாற்றில் இரண்டு கிராம்புகளை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்பு கிராம்புகளை எடுத்துவிட்டு எலுமிச்சை சாற்றை ஆணி மீது விடவும். அது காய்ந்த பின் மறுபடியும் விடவும். ஒரு நாளுக்கு பல முறை இதை செய்யவும்.
3. இன்னொரு விதம் – எலுமிச்சை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி புளிப்பு ஈஸ்ட் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து கொள்ளவும். இதை ஆணி உள்ள இடத்தில் தடவி, பேண்டேஜ் போட்டு, இரவு முழுவதும் விடவும்.
இந்த மூன்றில் நீங்கள் எதை வேண்டுமானாலும் நிவாரணம் கிடைக்கும் வரை தினமும் செய்யலாம்.
பூண்டு
பூண்டு இயற்கையில் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது என்பதால், கால் ஆணி சிகிச்சைக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும், பூண்டு ஆண்டிபங்கல் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகளும் கொண்டுள்ளதால், நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும்.
1. பாதி பூண்டை ஆணியின் மீது வைத்து தேய்க்கவும். தோல் காய்ந்த பிறகு, பேன்டேஜ் போட்டு இரவு முழுவதும் விடவும். அடுத்த நாள் காலையில் கட்டை பிரித்து, கால்களை மிதமான நீரில் கழுவவும். கால் ஆணி மறையும் வரை தினமும் இரவு இதை செய்யவும்.
2. மாற்றாக, இரண்டு மூன்று பூண்டு துண்டுகளை உப்பு கலந்து ஒரு பேஸ்ட் போல செய்து அதையும் காலில் தடவலாம். இந்த பேஸ்டை காலில் ஆணி உள்ள இடத்தில் தடவி, பேண்டேஜ் போட்டு மூன்று நாட்கள் விடவும். மூன்றாவது நாள், கட்டை பிரிக்கும்போது, ஆணி உதிர்ந்து வந்து விடும். தேவைபட்டால், இதை மீண்டும் செய்யவும்.
3. மற்றுமொரு விதம் – இரண்டு பூண்டு விழுதுகளை வைத்து பேஸ்ட் போல செய்து, சிறிது வினிகர் சேர்த்து அதை ஆணி மீது தடவவும். அதன் மீது பஞ்சு வைத்து, டேப் போட்டு ஒட்டவும். மூன்று மணி நேரம் கழித்து டேப்பை நீக்கி அந்த இடத்தை சுத்தம் செய்யவும். பல வாரங்களுக்கு இதை மீண்டும் மீண்டும் செய்யவும்.
டர்பெண்டைன் எண்ணெய்
கால் ஆணியை சரி செய்ய உதவும் இது, ஒரு வலிமையான ஆன்டிசெப்டிக். இந்த எண்ணெய் தோலுக்குள் விரைவாக ஊடுருவுவதால், விரைவில் குணமாக்குகிறது.
1. ஒரு மெல்லிய துணியில், ஐஸ் கட்டியை வைத்து, காலில் ஆணி உள்ள இடத்தில், இரண்டு நிமிடம் மசாஜ் செய்யவும். ஈரம் காய்ந்ததும், அதன் மீது டர்பெண்டைன் எண்ணெய் தடவி, பேண்டேஜ் போட்டு, இரவு முழுவதும் விடவும். படுக்கைக்கு போகும் முன்பு இதை செய்யவும்.
2. மாற்றாக, நான்கில் ஒரு பங்கு எக்ஸ்ட்ரா விர்ஜின் தேங்காய் எண்ணெயை மைக்கிரோவேவில் உருக்கி, அதனுடன், ஒரு தேக்கரண்டி டர்பெண்டைன் எண்ணெய் மற்றும் இரண்டு தேக்கரண்டி கற்பூர எண்ணெய் சேர்த்து ஆற விடவும். கால்களை மிதமான நீரில் நனைத்து, பின்பு உலர்த்தி, வீட்டில் தயாரித்த இந்த கிரீமை அப்ளை செய்யவும். மீதியை காற்று புகாதவாறு இறுக்கமாக மூடி ஜாடியில் வைக்கவும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதை மீண்டும் செய்யவும்.
கால் ஆணி குணமாகும் வரை இவற்றில் ஒரு சிகிச்சையை தொடர்ந்து செய்யலாம்.