கரு கலையப் போவதை ஒரு வாரத்துக்கு முன்னாடியே எப்படி கண்டுபிடிக்கிறது?
கர்ப்ப காலம்
அமெரிக்க மருத்துவ கல்லூரி மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் (ACOG) கூற்றுப் படி, கருச்சிதைவு என்பது கர்ப்ப இழப்பு தொடர்பான ஒரு மிகவும் பொதுவான வகை ஆகும். அனைத்து மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட கருத்தரிப்பில், 10-25 % கருச்சிதைவில் முடிவடையும் என்று ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
இரசாயன கர்ப்பம் 50-75% கருச்சிதைவுகளுக்கும் காரணமாக இருக்கலாம். கரு உள்வாங்கப்பட்ட சிறிது காலத்தில் இத்தகைய கர்ப்ப இழப்பு உண்டாகிறது. மாதவிடாய் காலத்திற்கு சற்று முன்னரே இரத்தப்போக்கு உண்டாகி விடும் அறிகுறியும் தென்படுகிறது. ரசாயன கர்ப்பத்தில் ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்வதற்கு முன்னரே கரு இழப்பு உண்டாகிறது.
பெரும்பாலான கருச்சிதைவு கர்ப்பகாலத்தின் முதல் 13 வாரங்களில் நிகழ்கிறது. கர்ப்ப காலம் என்பது மிகவும் சந்தோஷமான தருணம் ஆகும். ஆனால் இன்றைய நாட்களில் நிகழும் அதிக எண்ணிக்கையிலான கருச்சிதைவுகள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டவசமான தருணங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டவர்கள் மற்றும் மற்றவர்கள், இந்த மோசமான நிகழ்வைப் பற்றி மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ளும் புரிதலை உண்டாக்க பயனுள்ளதாக அமையும் இந்தப் பதிவு
கருச்சிதைவு பற்றிய உண்மைகள்
ஒரு கருச்சிதைவுடன் ஒருங்கிணைந்து பல்வேறு குழப்பமான தருணங்களும், நிலைகளும் உண்டாகும். உண்மையில் பல்வேறு வகையான கருச்சிதைவுகள் உள்ளன, ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு சிகிச்சைகள் உள்ளன, ஒவ்வொரு கருச்சிதைவின் அனுபவம் என்ன என்பதைப் பொறுத்து வெவ்வேறு புள்ளிவிவரங்கள் உள்ளன.
பின்வரும் தகவல்கள் கருச்சிதைவு பற்றிய ஒரு அகலமான பார்வையைத் தருகிறது. ஒருவேளை நீங்களும் இந்த துயரமான சூழ்நிலையை கடந்திருந்தால் அல்லது கடக்க முற்பட்டால், இந்த நிலையைக் குறித்த அறிவை உங்களுக்கு கொடுக்க இந்த பதிவு உங்களுக்கு உதவுகிறது. அந்த சூழ்நிலையில் நீங்கள் தனிமையை அல்லது இழப்பை பற்றி உணராமல் மறுமுறை இந்த சூழல் ஏறப்டாத நிலையை உங்களால் உருவாக்கக் கூடிய தெளிவை உங்களுக்கு இந்த பதிவு வழங்கலாம்.
கர்ப்பம் குறித்த சிக்கல்களைப் பற்றி மனம் திறந்து பேசி, உங்கள் குழப்பங்களைத் தீர்த்து தெளிவு கொள்ள உங்கள் மருத்துவர் உங்களுக்கு நல்ல முறையில் உதவுவார்.
சந்தேகங்கள்
கருச்சிதைவு குறித்த உங்கள் கேள்விகளையும் குழப்பங்களையும் தீர்த்துக் கொள்ள நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். நீங்கள் எங்களுடைய உதவி எண் 1-800-672-2296 ஐ அணுகவும். எங்கள் பிரார்த்தனைக் குழுவிடம் உங்கள் பிரச்சனை குறித்த பிரார்த்தனையை தெரிவிக்க prayers @ americanpregnancy.org என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். உங்கள் பொதுவான கேள்விகளுக்கான விடைகள் இதோ உங்களுக்காக..
கருச்சிதைவு ஏன் உண்டாகிறது?
கருச்சிதைவு உண்டாவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன, பெரும்பாலும் இதன் காரணம் அறியமுடியாததாக உள்ளது. கருத்தரித்த முதல் மூன்று மாதத்தில் கருச்சிதைவிற்கான பொதுவான காரணம், குரோமோசோம் பிறட்சிகள் , அதாவது குழந்தையின் குரோமோசோமில் எதாவது தவறு நிகழ்வது. சேதமடைந்த முட்டை அல்லது விந்தணு இத்தகைய குரோமோசோம் பிறட்சிகளுக்கு காரணமாக அமையலாம் அல்லது கருவுற்ற முட்டை பிரித்தெடுக்கும் செயல்முறையில் உண்டாகும் கோளாறாகவும் இருக்கலாம்.
காரணங்கள் (இவை மட்டும் அல்ல)
.ஹார்மோன் பிரச்சனைகள், தாயின் ஆரோக்கியத்தில் பாதிப்பு அல்லது தொற்று பாதிப்பு
. வாழ்வியல் முறை (அதாவது, புகை பிடிப்பது, போதைப் பொருள் பயன்பாடு, குறைந்த ஊட்டச்சத்து, அதிகரித்த காபின், கதிர்வீச்சு அல்லது நச்சு வெளிப்பாடு)
. கருப்பை அகலத்தில் கருபதிப்பு சரியாக நிகழாமல் இருக்கும்போது
. தாயின் வயது
. தாய்க்கு உண்டாகும் அதிர்ச்சி
கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிரூபிக்கப்படாத காரணங்கள் பாலினம், வீட்டிற்கு வெளியில் வேலை பார்ப்பது (ஒரு தீங்கு விளைவிக்கும் சூழலில் இல்லாவிட்டால்) அல்லது மிதமான உடற்பயிற்சிகள்.
வாய்ப்புகள் என்ன?
கர்ப்பமடையும் வயதில் உள்ள பெண்களுக்கு கருச்சிதைவிற்கான வாய்ப்புகள் 10-25%உள்ளது. மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கும் பெண்களுக்கு 15-20% வாய்ப்பு உள்ளது.
. தாயின் வயது அதிகரிக்கும்போது கருச்சிதைவிற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
. 35 வயதிற்கு கீழே உள்ள பெண்கள் தாய்மை அடையும்போது கருச்சிதைவிற்கான வாய்ப்பு 15% உள்ளது.
. 35-45 வயது உள்ள பெண்கள் கருத்தரிக்கும்போது , கருச்சிதைவிற்கான வாய்ப்பு 20-35% உள்ளது.
. 45வயதிற்கு மேல் உள்ள பெண்கள் கருதரிக்கும்போது, கருச்சிதைவிற்கான வாய்ப்பு 50% உள்ளது.
. ஒருமுறை கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு அடுத்தமுறை கருச்சிதைவு ஏற்பட 25% வாய்ப்பு உள்ளது. (முந்தைய கருச்சிதைவு ஏற்படாதவர்களை விட இந்த எண்ணிக்கை சற்று அதிகம்)
கருச்சிதைவு எச்சரிக்கை அறிகுறிகள்
கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் அதாவது ஒன்று அல்லது அணைத்து அறிகுறிகளையும் நீங்கள் அனுபவித்தால் உடனடியாக உங்கள் மருத்துவ நிபுணரிடம் சென்று கருச்சிதைவு குறித்த பரிசோதனையை செய்து கொள்வது நல்லது.
. மிதமானது முதல் தீவிரமான முதுகு வலி. (வழக்கமான மாதவிடாய் வலியை விட மோசமான வலியை உணர்வது)
. எடை குறைப்பு
. வெள்ளை – பிங்க் நிற சளி வெளியேற்றம்
. வலியுடன் அல்லது வலி இல்லாத நிலையில் பழுப்பு அல்லது சிவப்பு நிற உதிரப்போக்கு (அனைத்து கர்ப்பங்களில் 20-30% பேர் கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் இரத்தப்போக்கு அனுபவிக்க முடியும், சுமார் 50% பேர் சாதாரண கர்ப்பம் காலத்தை அனுபவிப்பார்கள் )
. பிறப்புறுப்பின் வழியாக திசுக்கள் உறைந்து வெளியாவது
. கர்ப்பதிற்கான அறிகுறிகள் சட்டென்று குறைவது
கருச்சிதைவின் வெவ்வேறு விதங்கள்
கருச்சிதைவு என்பது ஒற்றை நிகழ்வு அல்ல. இது ஒரு தொடர் செயல்பாடு. கருச்சிதைவில் பல்வேறு விதமான பருவங்கள் மற்றும் விதங்கள் உள்ளன. ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ள அதிக தகவல்கள் உள்ளன. இதனை பற்றி அறிந்து கொள்வதால் கர்ப்பகாலத்தில் உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதை உங்களால் சிறப்பாக அறிந்து கொள்ள முடியும். வயிற்றில் உள்ள சிசுவின் ஆரம்ப கட்ட வளர்ச்சி பற்றி புரிந்து கொள்வதன் மூலம் மற்றும் முதல் மூன்று மாதத்திற்கான கரு வளர்ச்சி பற்றி அறிந்து கொள்வதன் மூலம் கருச்சிதைவிற்கான சாத்தியம் பற்றி உங்கள் மருத்துவ வல்லுனர்கள் கூறும் காரணங்களைப் பற்றி உங்களால் தெளிவாக புரிந்து கொள்ள இயலும்.
பெரும்பாலான கருச்சிதைவுகள் கருச்சிதைவு என்ற பெயரில் மட்டுமே அழைக்கபப்டுகின்றன. ஆனால் சிலவற்றின் அனுபவம் மூலம் உங்கள் மருத்துவர்கள் அவற்றை வேறு விதமான பெயர்களில் அழைப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கலாம்.
கருச்சிதைவின் வகைகள்
. அச்சுறுத்தும் கருச்சிதைவு
முன்கூட்டிய கர்ப்பத்தில் இரத்தப்போக்குடன் கூடிய வலி மற்றும் கீழ் முதுகு வலி ஏற்படும். கருப்பை மூடி இருக்கும். இந்த இரத்தப்போக்கு பொதுவாக கரு பதித்தலின் விளைவாகும்.
. தவிர்க்க முடியாத அல்லது முழுமை பெறாத கருச்சிதைவு:
கருப்பை திறந்து, அடிவயிறு அல்லது முதுகு வலியுடன் கூடிய உதிரப்போக்கு. கர்ப்பப்பை வாய் நீட்டிக்கப்படும்போது அல்லது அதன் சவ்வுகள் முறியும்போது கருச்சிதைவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. கருச்சிதைவு முழுமையடையாதபோது உதிரப்போக்கு மற்றும் வலி தொடர்ந்து நீடிக்கிறது.
. முழுமையான கருச்சிதைவு
கருப்பைக்குள் இருந்து கரு முழுவதுமாக அகற்றப்படும்போது உண்டாவது முழுமையான கருச்சிதைவு. உதிரப்போக்கு, வலி மற்றும் இதர அறிகுறிகள் முழுவதும் விரைந்து நின்று விடும். முழுமையடைந்த கருச்சிதைவை அல்ட்ரா சவுண்ட் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். D&C என்னும் அறுவை சிகிச்சை மூலம் முழுமையான நிறைவு செய்யப்பட்ட கருச்சிதைவை செய்து கொள்ள முடியும்.
. தவறிய கருச்சிதைவு
தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதை பெண்கள் உணர முடியாமல் இருக்கலாம். தவறிய கருச்சிதைவு என்பது கருமுட்டை வெளியேற்றப்படாமல் உண்டாகும் கருவின் இறப்பு ஆகும். இது எப்போது நிகழ்ந்தது என்பது பற்றி அறிய முடியாது. கர்ப்பம் குறித்த அறிகுறிகள் நிற்கும்போது அல்லது அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையின்போது சிசுவின் இதய துடிப்பு கேட்காதபோது மட்டுமே இதனை அறிந்து கொள்ள முடியும்.
. மீண்டும் மீண்டும் கருச்சிதைவு
3 அல்லது அதற்கு மேற்பட்ட முதல் மூன்று மாத கருச்சிதைவுகள் இந்த வகையில் அடங்கும். இது கருத்தரிக்க முயற்சித்திருக்கும் தம்பதிகளில் 1% ஐ பாதிக்கும்.
. அன்எம்ப்ரயோனிக் கர்ப்பம்
ஒரு கருமுட்டை கர்ப்பப்பைக்குள் பதிந்தாலும், கரு வளர்ச்சி தொடங்காமல் இருக்கும் நிலையைக் குறிப்பது இந்த வகையாகும். கரு உறை இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் சிசு வளர்ச்சி இல்லாமல் இருக்கும் நிலை இது.
. வேற்றிடக் கருவுறுதல்
கருவுற்ற முட்டை, கருப்பையைத் தவிர மற்ற இடங்களில் பதியும் போது, குறிப்பாக கருப்பை இணைப்புக் குழாயில் பதியும்போது இந்த நிலை உண்டாகிறது. கருமுட்டையின் வளர்ச்சியை உடனடியாக தடை செய்வதற்கான சிகிச்சை தரப்பட வேண்டும். துரிதமாக செயல்பட மறுத்தால், தாய்க்கு பல்வேறு சிக்கல்கள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.
. முத்துபிள்ளைக் கரு
ஒரு மரபணு பிழை விளைவாக கருத்தரித்தல் செயல்முறையின் போது .கருப்பையின் உட்புறம் அசாதாரண திசு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் முத்துபிள்ளைக் கருவில் கருவளர்ச்சி என்பது மிகவும் அரிதாக ஏற்படும். ஆனால் கர்ப்பத்தின் பொதுவான அறிகுறிகள், தவறிய மாதவிடாய், கர்ப்ப பரிசோதனையில் நேர்மறை தீர்வு, தீவிர குமட்டல் போன்றவை இருக்கும்.
கருச்சிதைவிற்கான சிகிச்சை முறைகள்
கருச்சிதைவின் போது அல்லது அதற்கு பின்னர் சிகிச்சை செய்து கொள்வதற்கான முக்கிய குறிக்கோள், இரத்தப்போக்கைத் தடுப்பது மற்றும் தொற்று பாதிப்பை தடுப்பது. கருச்சிதைவிற்குப் பின்னான காலகட்டத்தில் உங்கள் உடல் கருவின் திசுக்களை தானாக வெளியேற்றும், இதற்கு எந்த ஒரு மருத்துவ முறையும் தேவைப்படுவதில்லை. ஒருவேளை, உங்கள் உடல் அந்த திசுக்களை வெளியேற்றவில்லை என்றால், இரத்தப்போக்கை நிறுத்த ஒரு பொதுவான வழி, D&C என்று அழைக்கப்படும் டைலேஷன் மற்றும் க்யுரேட்டேஜ் முறையாகும். இந்த வகை அறுவை சிகிச்சைக்கு பின் இரத்தப்போக்கை நிறுத்த மருந்துகள் பரிந்துரைக்கப்படும். வீட்டில் ஓய்வெடுக்கும்போது , இரத்தப்போக்கு நிலையை கூர்ந்து கவனிக்க வேண்டும். இரத்தப்போக்கு அதிகரிப்பது அல்லது குளிர், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உணரப்பட்டால், மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்வது அவசியம்
கருச்சிதைவைத் தடுப்பது எப்படி?
பெரும்பாலான கருச்சிதைவிற்கு காரணம் குரோமோசோம் பிறட்சிகள் என்பதால் அவற்றைத் தடுக்க வழிகள் இல்லை. கருவுறுதல் சிறப்பாக உண்டாக முடிந்த வரை கருத்தரிப்பிற்கு முன் ஆரோக்கியமான உடல்நிலையைப் பேணுவது முக்கியம். இதனால் கருவளர்ச்சிக்கு ஏற்ற ஒரு ஆரோக்கிய சூழல் உண்டாகிறது. கருச்சிதைவும் தடுக்கப்படுகிறது.
. வழக்கமான உடற்பயிற்சி
. ஆரோக்கியமான உணவு
. மன அழுத்தத்தை நிர்வகிப்பது
. ஆரோக்கிய எல்லைக்குள் உடல் எடையை பராமரிப்பது
. தினமும் போலிக் அமிலம் எடுத்துக் கொள்வது
. புகை பிடிக்காமல் இருப்பது
போன்றவை ஆரோக்கிய பழக்கங்களாக கருதப்படுகின்றன.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்
நீங்கள் கருவுற்றிருக்கிறீர்கள் என்பது உறுதி செய்யப்பட்டவுடன் மீண்டும் உங்கள் குறிக்கோள் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமே. உங்கள் குழந்தை சிறப்பாக வளர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குங்கள்.
. உங்கள் அடிவயிற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
. நீங்கள் புகை பிடிக்க வேண்டாம் மற்றும் புகை பிடிக்கும் இடங்களில் நீங்கள் இருக்க வேண்டாம்.
. மது அருந்த வேண்டாம்.
. அளவுக்கு அதிகமான மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது நல்லது.
. காபின் எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
. கதிர்வீச்சு, தொற்று நோய், எக்ஸ்ரே ஆகியவற்றில் இருந்து விலகி இருங்கள்.
. விளையாட்டு மற்றும் காயம் உண்டாகும் செயல்பாடுகளில் இருந்து விலகி இருங்கள்.
கருச்சிதைவிற்கான உணர்வுபூர்வமான சிகிச்சை
துரதிர்ஷ்டவசமாக, கருச்சிதைவு என்பது யாரையும் பாதிக்கலாம். கருச்சிதைவிற்கு பிறகு உடல்நிலையில் முன்னேற்றம், உணர்வுகளில் சமநிலை மற்றும் மறுபடி கருத்தரிப்பது போன்றவை தொடர்பாக பல கேள்விகள் ஒரு பெண்ணிற்கு எழலாம். தனது குடும்பம், நண்பர்கள், மருத்துவர் ஆகியவர்களுடன் அந்தப் பெண் மனம் திறந்து பேசுவதால் இந்த நிலையில் இருந்து எளிதில் விடுபட முடியும்.