தண்டுவட மரப்பு நோய்
மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் இந்த தண்டுவட மரப்பு நோயை மேலோட்டமாக பார்க்கும்போது உணவின் முக்கிய பங்கு இருப்பதாக தெரிவதில்லை. ஆனால் இந்த பாதிப்பு வளர்ச்சியடையும்போது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதும், ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பதும் உண்மையில் இந்த பாதிப்பை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவுகிறது என்பதை அறிய முடிகிறது.
புரதங்கள்
அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள், குறைந்த கொழுப்பு புரதம், குறைந்த கொழுப்பு பால் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிப்பதுடன், தண்டுவட மரப்பு நோயின் மீட்சிக்கு இடையிலான கால கட்டத்தை நீட்டிக்க முடியும்.
ஆரோக்கிய உணவுப்பழக்கம்
மல்டிபிள் செலேரோசிஸ் என்னும் தண்டுவட மரப்பு நோய் பாதிப்பு உள்ளவர்கள், ஆரோக்கியமான உணவு பழக்கத்தைப் பின்பற்றுவதால், அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்று 2015ம் ஆண்டு வெளியான ந்யுட்ரிஷன் ந்யுரோ சயின்ஸ் என்ற ஆய்வு வெளிபடுத்துகிறது. சர்க்கரை, ட்ரான்ஸ் கொழுப்பு போன்ற உணவுகள் இந்த அறிகுறிகளை மேலும் மோசமாக்குவதால் வேறு எந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
தண்டுவட மரப்பு நோய் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய குறிப்பிட்ட உணவு அட்டவணை எதுவும் இதுவரை பரிந்துரைக்கப்படவில்லை. இருப்பினும், உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணருடன் தொடர்ந்து ஆலோசித்து உங்கள் உடலுக்கு ஏற்ற உணவை தேர்வு செய்து கொள்வது நல்லது. கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை தவிர்ப்பது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து முடிவெடுக்கலாம்.
நிறைவுற்ற கொழுப்பு
சிவப்பு இறைச்சி, நிறை கொழுப்பு பால் பொருட்கள் போன்ற விலங்கு உணவுகள் அல்லது அவற்றின் துணை பொருட்கள் போன்றவற்றில் இருந்து கிடைப்பது நிறைவுற்ற கொழுப்பு. பனங்கொட்டை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு தயாரிக்கும் பொருட்களிலும் இந்த கொழுப்பு உண்டு. இத்தகைய நிறைவுற்ற கொழுப்பு, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL அளவை அதிகரிக்கிறது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால், தமனி தடிப்பு உண்டாகலாம், இதனால் மாரடைப்பு அல்லது வாதம் தாக்கும் அபாயம் ஏற்படலாம்.
மல்டிபிள் செலேரோசிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு இல்லாதவர்ளுடன் ஒப்பிடும்போது, இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக பிப்ரவரி 2018ம் ஆண்டு, வெளியான ஒரு அறிவியல் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. ஹைபர் டென்ஷன், இதய நோய் போன்ற பாதிப்புகள் தண்டுவட மரப்பு நோயை மேலும் மோசமடைய வைக்கின்றன.
ட்ரான்ஸ் கொழுப்பு
கடைகளில் விற்கும் குக்கி, பைஸ், க்ராகேர்ஸ், மற்றும் இதர பாக்கெட் உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்பு இருப்பதால் அத்தகைய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஊட்டச்சத்து லேபிள்களை அடையாளம் காண்பதற்கான முக்கிய வார்த்தைகள், “ஓரளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள்” மற்றும் “குறுக்கீடு” என்று கிளீவ்லாண்ட்டில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர் ஆமி ஜேமிசோன்-பெடோனிக், என்கிறார். ட்ரான்ஸ் கொழுப்பு , இரத்தக் குழாய்களில் அழற்சியை அதிகரிக்கிறது ஆகவே, இவை இதய நோயிற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
பசும்பால்
பசும்பாலில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு தவிர, அதில் உள்ள குறிப்பிட்ட புரதம் கூட, மல்டிபிள் செலேரோசிஸ் பாதிப்பு உள்ளவர்களில் சிலருக்கு எதிர்வினை புரிகிறது என்று 2010ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆட்டோ இம்யுன் டிசீஸ் என்ற பத்திரிகையில் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வின் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியபடி, இந்த காரணத்திற்காக பசும்பாலில் உள்ள மற்ற ஊட்டச்சத்துகளை இழப்பது அவ்வளவு சரியானதல்ல என்று மற்ற ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உண்மையில் மார்ச் 2013ம் ஆண்டு நடந்த ஆய்வின் படி, மல்டிபிள் செலேரோசிஸ் பாதிப்பு உள்ளவர்கள், இந்த பாதிப்பு இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது பசும்பாலை பருகுவதால் எந்த ஒரு எதிர்வினையையும் எதிர்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.
ஒருவேளை, இந்த நோய் பாதிப்பு உள்ளவர்கள், பசும்பாலைப் பருகுவதை தவிர்ப்பதால் உங்கள் அறிகுறிகளில் எதாவது முன்னேற்றம் தென்படும் என்றால், அந்த பாலில் உள்ள அளவிற்கு அதிக அளவு கால்சியம், புரதம், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துகளை மற்ற உணவுகளில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. சோயா பால், பாதாம் பால், முந்திரி பால் போன்றவற்றில் பசும்பாலை விட அதிக கால்சியம் உள்ளது. ஆகவே இவை பசும்பாலுக்கு சிறந்த மாற்றாக இருக்க முடியும் என்று காஸ்டெல்லோ கூறுகிறார்.
சர்க்கரை
அதிகமாக சர்க்கரை எடுத்துக் கொள்ளுதல் , குறிப்பாக இனிப்புகள் மூலமாக சர்க்கரையை எடுத்துக் கொள்வதால் உங்கள் உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரிப்பதால் , உங்கள் தினசரி செயல்பாடுகள் மற்றும் உடல் இயக்கங்களில் சிரமம் உண்டாகலாம் என்று ஜேமிசோன் கூறுகிறார். அதிகரித்த எடை, சோர்வை அதிகரிக்கிறது,
இது மல்டிபிள் செலேரோசிஸ் பாதிப்பின் முக்கிய அறிகுறியாகும். ஆகவே இனிப்பு உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. தேசிய தண்டுவட மரப்பு நோய் சமூகத்தின் படி, சர்க்கரை என்பது அழற்சியை உண்டாக்கும் உணவு என்பதால் இது, இந்த நோய் பாதிப்பில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்குகிறது என்பது தெரிய வருகிறது.
சோடியம்
சோடியம் அளவு குறித்து உணவு லேபிள்களில் பரிசோதிக்க வேண்டும். வெளியிடப்பட்ட நரம்பியல் ஆய்வில் , மல்டிபிள் செலேரோசிஸ் பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் உணவில் அதிக சோடியம் சேர்த்துக் கொள்வதால், அவர்கள் நிலை மோசமடைவதாகவும், மேலும் புதிய சேதம் உண்டாகும் அபாயம் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகவே உணவில் உப்பை குறைவாக சேர்த்துக் கொள்வது நல்லது.
அதிகரித்த சோடியம் உட்கொள்ளல், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், உயர் இரத்த அழுத்த பாதிப்பு, மல்டிபிள் செலேரோசிஸ் பாதிப்பு உள்ளவர்களின் உயிரைக் குடிக்கும் அபாயம் உள்ளதாக காஸ்டெல்லோ கூறுகிறார். நீங்கள் ஆரோக்கியமானவராக இருந்தால் ஒரு நாளில் 2,300 மிகி அளவு சோடியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இதய நோய் பாதிப்பு அல்லது வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள், ஒரு நாளில் 1500 மிகி அளவு சோடியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூறுகிறது.
சுத்தீகரிக்கப்பட்ட கார்போ உணவுகள்
வெள்ளை அரிசி, வெள்ளை பிரட், காலை உணவு தானியங்கள் ஆகியவை சுத்தீகரிக்கபட்ட கார்போ உணவுகள் ஆகும். இந்த பதப்படுத்தப்பட்ட கார்போ உணவுகள் பொதுவாக இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, இதய ஆரோக்கியத்தில் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்குகின்றன.
இதற்கு மாற்றாக, முழு தானிய பிரட், பழுப்பு அரிசி, முழு கோதுமை பாஸ்தா போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். மல்டிபிள் செலேரோசிஸ் பாதிப்பின் ஒரு வித அறிகுறியான மலச்சிக்கலைப் போக்க உயர் நார்ச்சத்து உணவுகளை தேர்வு செய்யலாம் , இதனால் உங்கள் உடல் எடையும் குறைந்து , நீண்ட நேரம் பசிக்காமல் இருக்கும் உணர்வும் தோன்றும்.
க்ளுடன்
பி.எம்.சி நரம்பியல் ஆய்வில் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வானது, பொது ஜனத்தொகையை விட, மல்டிபிள் செலேரோசிஸ் பாதிப்பு உள்ளவர்கள் மத்தியில் க்ளுடன் சகிப்பு தன்மை இல்லாததன் காரணமாக, தன்னுடல் தாக்க நோய் இருப்பதை கண்டறிந்துள்ளது. கோதுமை, பார்லி, கம்பு போன்ற உணவுகளில் காணப்படும் ஒரு வகை புரதம் இந்த க்ளுடன் ஆகும். செலியக் நோய் பாதிப்பு உள்ளவர்கள், க்ளுடனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் குடல் சேதம் தவிர்க்கப்படுகிறது.
செலியக் நோய் பாதிப்பு இல்லாதவர்கள் கூட உணவில் க்ளுடனை தவிர்ப்பதால் ஒரு சௌகரியமான உணர்வைப் பெறுவதாக அறியப்படுகிறது. க்ளுடன் தவிர்ப்பதால் மல்டிபிள் செலேரோசிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு உண்டாகும் நன்மை குறித்த ஆதாரம் இல்லாதபோதும், இதனைத் தவிர்ப்பது ஒரு தீர்வாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று ஜேமிசோன் கூறுகிறார். மற்ற உணவுகளைத் தவிர்ப்பதால் எந்த ஒரு தீர்வும் கிடைக்காதபோது இதனை நீங்கள் முயற்சிக்கலாம்