நாம் நினைப்பதை போல இந்த புற்றுநோய் ஒன்றும் அவ்வளவு சாதாரணமானது கிடையாது. உடலில் எங்கு வேண்டுமானாலும் இது தனது ராஜ்யத்தை தொடங்கலாம்.
பெரும்பாலும் நாம் கணைய புற்றுநோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பிறப்புறுப்பு புற்றுநோய் போன்றவற்றை தான் அதிக அளவில் கேள்வி பட்டிருப்போம். ஆனால், இது வரை கேட்டிருக்காத ஒரு புற்றுநோயும் உண்டு.
அது என்ன?
நாம் இது வரை கேள்விப்பட்டிராத புற்றுநோய் “இதய புற்றுநோய்” தான். இதயத்தில் புற்றுநோய் வருமா..? என்கிற சந்தேகம் இதுவரையிலும் நம்மில் சிலருக்கு கூட தோன்றி இருக்காது. ஆனால், இது தான் உண்மை. மற்ற உறுப்புகளை காட்டிலும் இதயத்தில் புற்றுநோய் உருவாகாதாம்.
எதனால் புற்றுநோய்?
புற்றுநோய் என்பது நமது DNA சிதைவடைந்து அதன் செல்கள் புற்றுநோய் செல்களாக உருவாகும். ஒரு செல் இரண்டாகும். இரண்டு நான்காகும். நான்கு செல் எட்டாகும்ஸஇப்படியே ஒவ்வொன்றும் பல வகையில் பிரிந்து லட்ச கணக்கான செல்களாக பிரிந்து விடும். இது இதயத்திற்கு மட்டும் மாறுபடும்.
மற்ற உறுப்புகள்
அதிகப்படியான சூரிய ஒளி தோல் புற்றுநோயை உண்டாகும். கார்சினோஜெனிக் கொண்ட பொருட்களை சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும்.
மார்பகத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜென் மார்பக புற்றுநோயை உண்டாக்கும். இப்படி மற்ற உறுப்புகளில் உருவாவது போன்ற அமைப்பு இதயத்திற்கு கிடையாது. காரணம் தெரியுமா..?
காரணம் என்ன..?
இதயத்தில் உள்ள தசை செல்கள் மைகோசிட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற உறுப்புகளில் உள்ள செல்கள் புற்றுநோய் செல்களாக மாற்றம் பெறும் தன்மை கொண்டவை. ஆனால், இதயத்தில் உள்ள இந்த தசை செல்கள் ஒன்று இரண்டாக பிரிய வாய்ப்பில்லை.
பிரிக்க முடியாதா..?
இதயத்தின் தசை செல்களை இவ்வாறு பிரிக்க முடியாததற்கு அவற்றின் இயல்பு தன்மை தான் காரணம். இதயத்தில் மாரடைப்பு, இரத்த நாளங்களில் பாதிப்பு, இரத்தம் கட்டி கொள்ளுதல்..இது போன்ற பிரச்சினைகள் தான் உண்டாகும். ஆனால், இதயத்தில் புற்றுநோய் பெரும்பாலும் உண்டாகாது.
மற்ற உறுப்புகளுக்குமா..!
இதயத்தில் பெரும்பாலும் புற்றுநோய் செல்கள் உண்டாகாது. ஆனால், இதயம் மற்ற உறுப்புகளுக்கு இந்த புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் சொல்கின்றன.
இதயத்தின் வழியாக நுரையீரல், மார்பு, இரத்தம், போன்ற பல உறுப்புகளுக்கு புற்றுநோய் ஆபத்தை தரும்.
இதுவரை..!
இதயத்தில் ஏற்பட கூடிய புற்றுநோய் செல்கள் மிக அரிதான வகையிலே உள்ளது. ஓர் ஆய்வின் படி 1 மில்லியன் மக்களில் 50-க்கும் குறைவான மக்களுக்கே இந்த வகை புற்றுநோய் பாதிப்பு உள்ளதாம். மற்ற வகை புற்றுநோயை போல இது உடலில் எளிதாக உருவாகாது என்பதே நிதர்சனம்.