கண்ணுக்குத் தெரியாத அமீபா, பாக்டீரியா, வைரஸ் ஒட்டுண்ணிகளே நரம்பியல் பிரச்னை

25 Dec,2018
 

வெனம் (Venom)ஸ சமீபத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம். கதாநாயகனை ஏலியன் ஒட்டுண்ணி (Parasite) தாக்கிவிடும். அந்த ஒட்டுண்ணியால் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. அதன் இயக்கத்துக்கு ஓர் ஓம்புயிர் (Host) தேவை. அதனால், அந்த ஏலியன் ஒட்டுண்ணி, கதாநாயகனான ஓம்புயிரிடம் ஓர் ஒப்பந்தம் செய்து இணக்கமாகிவிடும். ஒட்டுண்ணியும் ஓம்புயிரும் சேர்ந்து செயல்படுவார்கள். இதனால், கதாநாயகனுக்குப் புது சக்தி கிடைக்கும். கதாநாயகன் சூப்பர் ஹீரோவாக மாறிவிடுவான்.
நிஜ வாழ்க்கையில் இது சாத்தியமில்லை. ஒட்டுண்ணியால் ஓம்புயிருக்கு ஒரு காலத்திலும் நன்மை செய்ய முடியாது. ஒட்டுண்ணி தனது வாழ்க்கைச் சுழற்சிக்கு ஓம்புயிரையே சார்ந்திருக்கும். ஓம்புயிரின் உடலில் அது மறைந்திருந்து, தேவையான ஆற்றலைக் கிரகித்துக்கொள்ளும்.

`டாக்ஸோபிளாஸ்மா’ (Toxoplasma) என்பது பூனையின் உடலில் வாழும் ஒரு வகை ஒட்டுண்ணி. பூனையின் உடலில் மட்டுமே இந்த ஒட்டுண்ணியால் இனப்பெருக்கம் செய்ய முடியும். பூனையின் கழிவுகளின் வழியாக வெளியேறும்போது எலி, அணில் போன்ற பிராணிகளின் வயிற்றுக்குள் சென்றுவிடும். பிறகு மீண்டும் இனப்பெருக்கம் செய்ய, பூனையின் உடலுக்குள் சென்றாக வேண்டும். அதற்காக எலியின் நரம்பு மண்டலத்தைத் தாக்கும். இதன் முதல் கட்டமாக எலி தனது அச்சத்தை இழந்துவிடும். இந்த நிலையில், எலிக்கு, ‘பூனையால் என்ன செய்துவிட முடியும்?’ என்ற கர்வம் எழும். இதனால் பூனையைத் தேடிச் சென்று அதற்கு இரையாகும். இது `டாக்ஸோபிளாஸ்மா’ செய்யும் மாய விளையாட்டு!
`டாக்ஸோபிளாஸ்மா’ மனிதனைத் தாக்கினால் என்னாகும்?  சிலரது மூளையில் வித்தியாசமான குரல் கேட்கும்; அவர்கள் பார்வை விசித்திரமாகக் காணப்படும்; திடீரென தற்கொலை எண்ணம் வெளிப்படும்; சாகசங்கள் செய்ய விரும்புவார்கள். இதுபோல ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால், உடனே ஒட்டுண்ணிகள் இருக்கின்றனவா என்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி ஒட்டுண்ணிகள் எப்படி நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றன? விவரிக்கிறார் நரம்பியல் நிபுணர் லஷ்மி நரசிம்மன்.
“கண்ணுக்குத் தெரியாத அமீபா, பாக்டீரியா, வைரஸ் ஆகிய நுண்ணுயிர்கள், வயிற்றுக்குள் வாழும் குடல்புழுக்கள், கண்ணுக்குத் தெரிந்த பேன், உண்ணி ஆகிய அனைத்துமே ஒட்டுண்ணிகள்தாம். மனிதனுக்கு ஏற்படும் பெரும்பாலான தொற்றுநோய்களுக்கு  ஒட்டுண்ணிகளே  காரணம். நமது ஆரோக்கியம் குறைந்து, நோய் எதிர்ப்பு மண்டலம் நலிவடையும்போதுதான் அவை வீரியத்துடன் நம்மைத் தாக்கத் தொடங்கும்.  நாம் வளர்க்கும் நாய் நம்மிடம் அமைதியாக, பாசமாக இருக்கும். ஆனால், ரேபிஸ் வைரஸ் தாக்கிவிட்டால் அதன் குணாதிசயம் மாறி, வெறிபிடித்துவிடும். யாரைப் பார்த்தாலும் கடித்துக் குதறும். ஒட்டுண்ணியான ரேபிஸ் வைரஸ், நாய் மூளையின் நியூரான்களைத் தாக்கி, இயல்புத் தன்மையையே மாற்றிவிடுவதால்தான், இந்த குண மாற்றம்.
ஒட்டுண்ணிகள் மனித உடலில் எங்கே, எப்படி ஒளிந்துகொண்டால் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் தாக்குதலிலிருந்து தப்பி உயிர் வாழ முடியுமோ, அந்த இடத்தில் மறைந்து உயிர் வாழும்.  ஒவ்வோர் ஒட்டுண்ணியும், ஒவ்வோர் இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தாக்கும். ரேபிஸ், மனித உடலில் ஊடுருவியதும் குரல்வளை, ஹிப்போகாம்பஸ் (Hippocampus) மற்றும் லிம்பிக் அமைப்புகளில் (Limbic System) தஞ்சமடையும். லிம்பிக் சிஸ்டத்தை அது ஹேக் (Hack) செய்வதால், ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அதீத அச்சத்தில் இருப்பார்கள். அத்துடன் அவர்களது குரல்வளை சிதைவதால், இயல்பாகப் பேசுவதுகூட நாய் கத்துவதைப்போல நமக்குக் கேட்கும். அவர்களால் தண்ணீர் குடிக்க முடியாது. தண்ணீரைக் கண்டாலே அவர்கள் அலறுவதற்கு இதுதான் காரணம்.
ஒட்டுண்ணிகள் நமது மூளையின் நியூரான்களை எந்த இடத்தில் தாக்குகின்றன என்பதைப் பொறுத்தே அவற்றின் விளைவுகள் அமையும். ஒட்டுண்ணிகள் லிம்பிக் சிஸ்டத்தைத் தாக்கும்போது நமது நடத்தை மாறிவிடும். நினைவுகளைச் சேமித்துவைக்கும் நியூரான் தாக்கப்படும்போது அனைத்தும் மறந்துவிடும். விஷுவல் ஏரியா தாக்கப்படும்போது கண்ணுக்கு முன் யாரோ நிற்பதுபோலத் தெரியும். மூளைக்குள் குரல் கேட்பதுகூட இந்த மாதிரியான தாக்குதலால்தான். நமது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியும் ரத்தத்தின் வெள்ளை அணுக்களைச் சார்ந்தே இயங்குகின்றன. ஆனால், ரத்தத்தில் வாழும் ஹீமோபைலேரியன் ஒட்டுண்ணி, நோய் எதிர்ப்பு மண்டலத்தால் எதிர் நடவடிக்கை எடுக்க முடியாதபடி ரத்தச் சிவப்பணுக்களில் மறைந்து இனப்பெருக்கம் செய்கிறது. மலேரியா இந்த வகையில்தான் நமக்குள் தங்கி, தாக்குகிறது. 
 
மனித உடலில் மிகப் பெரிய பாதுகாப்பு அம்சத்துடன் இருப்பது அணுக்கரு. இதனுள்தான் உயிரின் ஆதாரமான டி.என்.ஏ இருக்கிறது. இந்த அணுக்கருவுக்குத் தேவையான ஆற்றல் உற்பத்தியாகும் இடம் `மைட்டோகாண்ட்ரியா’ (Mitochondria).  இந்த மைட்டோகாண்ட்ரியாவில் ஒரு டி.என்.ஏ மட்டும் உடலுக்குத் தொடர்பே இல்லாமல் அணுக்கருவின் வெளியே இருக்கிறது. மனித உடலிலிருக்கும் டி.என்.ஏ.,  தாய் அல்லது தந்தையிடமிருந்து வந்திருக்க வேண்டும். ஆனால், இந்த மைட்டோகாண்ட்ரியா டி.என்.ஏ., `யூக்கரியோட்’ (Eukaryote) எனும் பாக்டீரியாவிலிருந்து வந்திருக்கிறது. எதனாலும் அழிக்க முடியாத ஒட்டுண்ணியாக மனிதனின் அணுக்கருவுக்குத் தேவையான ஆற்றல் உற்பத்தியாகும் இடத்தை ஆக்கிரமித்து வாழ்கிறது இந்த யூக்கரியோட். இந்த பாக்டீரியாவால் இயக்கப்படும் மிகப் பெரிய உருவம் மனிதன். இந்த உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தும் மனிதனுக்காகப் படைக்கப்பட்டவை என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், மனிதன் படைக்கப்பட்டதே ஒட்டுண்ணிகளுக்காகத்தான் என்பதுதான் உண்மை” என்கிறார் லஷ்மி நரசிம்மன்.
வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து பரவும் நோய்கள் பற்றியும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் விளக்குகிறார் அவசர சிகிச்சை மருத்துவர் பவித்ரா. 
“நாள்பட்ட காய்ச்சல், உடல் பலவீனம், கைகால் இணைப்புகளில் கடுமையான வலி, சளி, ஓயாத இருமல் போன்ற டெங்கு காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் சிலருக்கு தென்படும். ஆனால், ரத்தப் பரிசோதனை செய்தால் டெங்கு ரிசல்ட் நெகட்டிவாக வரும். இதுபோன்ற சூழலில் நமது உடலில் ஒட்டுண்ணிகள் இருக்கின்றனவா என்று பரிசோதனை செய்யவேண்டியது அவசியம்.
நோய்த்தொற்று ஏற்பட்ட வளர்ப்புப் பிராணிகளைத் தொடும்போதோ அல்லது பிராணிகளின் சிறுநீர், மலம், உமிழ்நீர் ஆகியவற்றின் மூலமோ பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, புழுக்கள் போன்ற ஒட்டுண்ணிகள் பரவுகின்றன. இந்த ஒட்டுண்ணிகள் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே. அதற்குக் காரணம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையடையாமல் இருப்பதே. பூனைகளைத் தூக்கும்போது அவற்றின் நகக்கீறல் வழியாக `டாக்ஸோபிளாஸ்மா’ ஒட்டுண்ணி நமக்குள் பரவி, கடுமையான காய்ச்சல் ஏற்படும். இதற்கு `பூனைக் கீறல் காய்ச்சல்’ (Cat Scratch Fever) என்று பெயர். இதையடுத்து வாந்தி, குமட்டல், உடல் சோர்வு, தலைவலி, என்செபலோபதி 
(Encephalopathy) ஆகிய பிரச்னைகள் ஏற்படும். சில நேரம் வீட்டுத் தொட்டியில் மீன் வளர்ப்பவர்களின் கை மற்றும் விரல்களுக்கிடையில் சொரி, அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பு புண்ணாகி வீங்கிவிடும். இதற்கு `ஃபிஷ் டாங்க் கிரானுலோமா’ (Fish Tank Granuloma) என்று பெயர். மீன்களிலிருந்து தொற்றும் மைகோபாக்டீரியத்தால் (Mycobacterium) இந்த நோய்த்தொற்று ஏற்படுகிறது.
நாய்களின் உடலில் பலவிதமான புழுக்கள் வளர்கின்றன. இவற்றின் மூலம் பரவும் அபாயகரமான பிரச்னை அழற்சி நோய் (Lyme Disease). இதற்கு `உண்ணிக் காய்ச்சல்’ (Tick Fever) என்ற பெயரும் உண்டு. அதாவது, நாய்களின் உடலிலிருக்கும் நோய்த்தொற்று உண்ணிகள் நம்மைக் கடிக்கும்போது முதலில் அந்த இடத்தில் எரிச்சல் ஏற்பட்டு தலைவலி, காய்ச்சல், குளிர் காய்ச்சல் வரும். இதைக் கண்டுகொள்ளாவிட்டால் உண்ணி வழியாகப் பரவும் பாக்டீரியா, புழுக்கள் மூலம் வாதம், நரம்பியல் பிரச்னைகள் ஏற்படலாம். 
நாம் வளர்க்கும் கிளி நோய்வாய்ப்பட்டிருந்தால் நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அதன் உமிழ்நீர், நக இடுக்கு, சிறுநீர் மற்றும் மலக் கழிவுகளிலிருக்கும் நுண்ணுயிர்கள் மூலம் நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் மூச்சுத்திணறல் ஏற்படும். பொதுவாகவே செல்லப்பிராணிகளை சுத்தமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். அவற்றைத் தொட்டவுடனும், உணவு உண்பதற்கு முன்பும் கை கழுவ வேண்டும். செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள், வீட்டை கிருமிநாசினியால் தினமும் துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகள் கடித்தாலோ அல்லது நகங்களால் கீறினாலோ உடனே சோப்பு போட்டு நன்றாகக் கழுவிவிட வேண்டும். பிறகு மருத்துவனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நோய்வாய்ப்பட்டவர்கள் செல்லப்பிராணிகளைத் தொடாமல் இருப்பது நல்லது” என்கிறார்  பவித்ரா.
ஒட்டுண்ணிகள் தொற்றாதபடி கால்நடைகளை எப்படிப் பராமரிப்பது என்று விளக்குகிறார் கால்நடை மருத்துவர் 
“பிராணிகள் மீது காணப்படும் உண்ணி, பேன், பூச்சிகள் ஆகியவையே பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம். மருந்துக் கடைகளில் நாய்களைக் குளிப்பாட்டும் ஷாம்பூக்கள், சோப்பு, தெளிக்கும் மருந்துகளைப் பயன்படுத்தி, புற ஒட்டுண்ணிகளை அழித்துவிடலாம். அக ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்த நாய் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு மாதமும் அதன் எடைக்கு ஏற்ப குடற்புழு நீக்க மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின் பேரில் கொடுக்க வேண்டும். வீட்டு நாய்களை, தெரு நாய்களுடன் பழகவோ அல்லது திறந்தவெளியில் திரியவோ அனுமதிக்காமல் இருப்பது நல்லது. முறையாகத் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டாலே வளர்ப்புப் பிராணிகளுக்கு வரும் நோய்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் அபாயத்தைத் தவிர்த்துவிடலாம்.
செல்லப்பிராணிகளுக்குப் பயன்படுத்தும் உடை, தண்ணீர் மற்றும் உணவு வைக்கும் பாத்திரம்  ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். புதிதாக நாய் அல்லது பூனை வாங்கினால் கால்நடை மருத்துவரிடம் சென்று ஒட்டுண்ணி பிரச்னை இருக்கிறதா என்று பரிசோதனை செய்யவேண்டியது அவசியம்.”



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies