மார்பக புற்றுநோய்: சுயபரிசோதனை செய்வது எப்படி?
16 Dec,2018
40 முதல் 49 வயதிலிருந்து பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பெண்கள் மாதந்தோறும் சுய மார்பக பரிசோதனை செய்தல் நலம்.
மாதவிலக்கு ஏற்பட்ட 7 முதல் பத்து நாட்களுக்குள் மார்பகத்தை பரிசோதித்து கொள்ளலாம். மார்பில் கட்டிகள், தடித்த பகுதிகள், வீக்கங்கள் இருக்கிறதா என கூர்ந்து கவனித்தல் வேண்டும். மார்பகங்களில் ஏதேனும் முடிச்சுகள் உள்ளதா என கவனித்தல் வேண்டும். இரு மார்பகங்களின் அளவு வடிவ மாற்றங்களை கவனித்தல் வேண்டும்.
இவை அனைத்தும் பரிசோதித்த பின்னர் படுக்கையில் படுத்தபடி பரிசோதிப்பது அவசியம். ஒரு கையை தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு மறு கையை வைத்து எதிர் மார்பகத்தை ஒரு வட்ட சுழற்சிபோல் தடவி பார்க்க வேண்டும். இப்பரிசோதனையில் மார்பக காம்பு மற்றும் அக்குள் பகுதியையும் தடவி பார்த்தல் வேண்டும். மார்பக கட்டி அழுத்தமாகவும் ஓரங்கள் ஓழுங்கற்றும் வலியின்றியும் இருக்கிறதா என கவனித்தல் வேண்டும்.
மறையாத கட்டிகளையும் மாற்றமின்றி காணப்படும் கட்டிகளையும் நன்கு தடவி பார்த்து கண்டுபிடிக்க வேண்டும். சில கட்டிகள் திடீரென தோன்றி அளவில் பெரிதாக காணப்படும். தாய் அல்லது சகோதரிகளுக்கு புற்றுநோய் இருத்தல். கர்ப்பம் தரிக்காதவர்கள். 35 வயதுக்கு மேலே முதலாவதாக கர்ப்பம் தரித்தவர்கள். சிறு வயதிலே மாதவிலக்கு நின்று போனவர்கள். மாதவிலக்கு முற்று பெற்றவர்கள். இவர்களுக்கெல்லாம் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்.
மார்பில் இயல்புக்கு மாறான குழியோ அல்லது தோல் தடித்து வட்டமாகவோ காணப்படுதல். மார்பின் தோல் ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள மிகச்சிறிய குழிகள் போன்று காணப்படுதல். வலியுடனோ அல்லது வலியில்லாமலோ அக்குகளில் காணப்படும் வீங்கிய நீணநீர் முடிச்சுகள். குணமாகாத சிவந்த தோலோ அல்லது புண்னோ தென்படுதல்.
முலைகாம்பிலிருந்து இயல்புக்கு மாறான கசிவுகள் வெளிப்படுதல். ஆரம்ப நிலையில் வலியோ எரிச்சலோ இருக்காது. பிற்பட்ட நிலைகளில் வலி ஏற்படும். பரிசோதித்தல் மாமோகிராம் என்பது மார்பகத்தை சிறப்பு முறையில் கதிர்வீச்சு மூலம் மிகச் சிறிய கட்டிகளைக் கூட எளிதில் கண்டறிய இயலும். இப்பரிசோதனை மூலம் புற்றுநோயின் ஆரம்பகால கட்டத்திலே கண்டறிந்து குணமாக்க முடியும்.
40 முதல் 49 வயதிலிருந்து பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பெண்கள் மாதந்தோறும் சுய மார்பக பரிசோதனை செய்தல் நலம். 3 வருடங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனையும் செய்தல் வேண்டும்.
50 வயதுக்கு மேல் ஓராண்டுக்கு ஒரு முறை மாமோகிராம் பரிசோதனை செய்வது நலம். மாமோகிராம் பரிசோதனை மட்டுமல்லாமல் மேலும் பல பரிசோதனைகளுக்கு பின்பே புற்று கட்டி என்பது உறுதிசெய்யப்படும். மார்பகத்தில் கட்டி ஏற்பட்டால் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிக அவசியம்.