குழந்தை பெற அஞ்சும் பெண்களுக்கு வரும் நோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
12 Dec,2018
‘டோக்கோபோபியா‘ என்றால் கருத்தரித்தல் மற்றும் குழந்தை பெறுவது தொடர்பாக ஏற்படும் பயம் அல்லது அச்சத்தை குறிக்கிறது.
உலக அளவில் 14 சதவீத பெண்கள் டோக்கோபோபியாவால் துன்புறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கருத்தரிப்பது பற்றி பெரும்பாலான பெண்கள் பதற்றமடைகின்றனர். இது இயல்பானதே.
ஆனால், இயல்பான இந்த பதற்றத்தைவிட டோக்கோபோபியா வித்தியாசமானது.
பதற்றம் இருக்கும் பெண்களுக்கு டோக்கோபோபியா வரும் சாத்தியம் உள்ளது.
டோக்கோபோபியா வருவதற்கு ஏதாவது ஒரு தாக்குதல், மனநலப் பிரச்சனை அல்லது கடந்தகால கசப்பான அனுபவம் காரணமாக இருக்கலாம்.
டோக்கோபோபியாவில் இரண்டு வகை:
1.கருத்தரித்து, குழந்தை பெற்று முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு வருவது.
2.முன் அனுபவம் உள்ளவர்களுக்கு வருவது.
டோக்கோபோபியாவால் துன்புறும் பெண்களுக்கு உதவி செய்கிற சமூக ஊடக குழுக்கள் சில உள்ளன.
சிகிச்சை, நட்பான உரையாடல்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின உதவியோடு டோக்கோபோபியாவுக்கு சிகிச்சை அளிக்கலாம்.
பெண்களுக்கு மனநலப் பிரச்சனை ஏதாவது இருந்தால், அந்த பிரச்சனை டோக்கோபோபியாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னால் சரிசெய்யப்பட வேண்டும்.