டெங்கு வந்தால் உடனடியாக செய்ய வேண்டியவை...
‘‘மழைக்காலத்தில் மனித இனத்தைப் பயமுறுத்தும் நோய்களில் ஒன்றாக மாறிவிட்டது டெங்கு. இதனை எதிர்கொள்ள தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரசாரம் தேவை. எனவே, மக்களிடம் தொடர்ந்து தகவல்களை எடுத்துச் செல்ல வேண்டும்’’ என்கிற சித்த மருத்துவர் கெளதம்குமார், டெங்கு குறித்த அடிப்படையான தகவல்களை இங்கே தொகுத்துத் தருகிறார்.
* டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி. ஏடிஸ் எஜிப்டி(Aedes aegypti) என்ற பிரிவைச் சேர்ந்த பெண் கொசுவால் இந்நோய் பரவுகிறது.
* டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவும். மற்றபடி தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் இந்தக் கிருமி பரவுவது கிடையாது. முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தக் காய்ச்சல் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு இது நேரடியாகப் பரவுவதும் இல்லை.
* தொடர்ந்து 3-7 நாள் காய்ச்சல், உடல் சோர்வு, தீவிர தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் சிவப்பு நிற புள்ளிகள் காணப்படும். எலும்பு உடைவது போன்று கடுமையான வலி இருக்கும். இவையெல்லாம் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்.
* டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இல்லாமல் கூட உங்களுக்கு டெங்கு காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. டெங்கு கொசு கடித்து 5-ல் இருந்து 7 நாட்கள் வரை எந்த அறிகுறிகளும் அந்த நபருக்கு இருக்காது. மனித உடலில் பல்கிப் பெருகும், அதன் பிறகே அறிகுறிகள் தென்படும்.
* டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியவை... உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ரத்தப் பரிசோதனை செய்யவும். டெங்கு பாதிப்பை கண்டறிய IGM, Elisa, PCR ஆகிய பரிசோதனைகள் உங்களுக்கு செய்யப்படும். உங்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றுங்கள். வேலைக்கு செல்லாமல், வீட்டிலே ஓய்வு எடுங்கள்.
* உடலில் நீர்ச்சத்து குறையும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
* கடும் வாந்தி,வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் நிலை மோசமாக தொடங்கினால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாக வேண்டும்.
* சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் 7 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும். உடல் வலி மற்றும் சோர்வு போன்ற இதன் பாதிப்புகள் 2 வாரங்களில் சரியாகி விடும்.
*டெங்குவைத் தவிர்க்க அந்த கொசுவை ஒழிப்பதே ஒரே வழி. டெங்கு பரப்பும் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் முட்டையிடும். இதனால் வீட்டில் சுற்றி இருக்கும் குட்டைகளில் தண்ணீர் தேங்குவது, தேங்காய் மூடியில் தேங்கும் தண்ணீர், வீட்டு தண்ணீர் டேங்குகளில் தேங்கும் தண்ணீரில் தான் இந்த வகை கொசுக்கள் முட்டையிட்டு வளரும். நல்ல தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.
* வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசு வலை பொருத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி போன்றவற்றை பயன்படுத்தலாம். வீட்டுச் சுவர்கள் மீது மருந்தைப் பயன்படுத்தினால் கொசுக்கள் ஒழியும்.
* வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் மருந்துகளைத் தெளிப்பதாலும் பலன் உண்டாக வாய்ப்புள்ளது.
* கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியுங்கள். இந்த வகை கொசு பொதுவாக பகல் நேரத்தில் தான் கடிக்கும். இரவில் கடிக்காது.
* நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சவேர், சுக்கு, மிளகு, பற்படாகம், கோரைக்கிழங்கு, சந்தனம், பேய்ப்புடல் என 9 வகை தொகுப்பே நிலவேம்பு குடிநீர். இதில் சேரும் பொருட்கள், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கெடுத்து சுரத்தை தடுக்கும் வல்லமை படைத்தது. சுரம் வருவதற்கு முன்பு தடுப்பு மருந்தாகவும், சுரம் இருப்பின் போக்குவதற்க்கும் பயன்படுத்தலாம் மற்றும் பல்வேறு வகையான சுரங்களையும் தீர்க்கும் குணமுடையது.
* பப்பாளி இலை சாறு ரத்த தட்டணுக்களை அதிகரிக்கும் தன்மை உள்ளது. டெங்கு காய்ச்சலில் இரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை கு
றைவை சரி செய்ய இம்மருந்துகள் நல்ல பயன் தரும்.
* Clevira tab and syrup-ல் பப்பாளி இலை சாறு மலைவேம்பு இலை சாறு மற்றும் நிலவேம்பு குடிநீரில் உள்ள மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மருந்தில் சிறந்த Anti viral செய்கை உள்ளதால் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் ஏனைய வைரஸ் காய்ச்சலில் சிறந்த நிவாரணம் அளிக்கும். அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இம்மருந்தைப் பயன்படுத்தலாம்.