வெங்காயத்துக்கு என்று ஒரு அரசியல் வரலாறே இருக்கிறது. அரசியல் மட்டுமா..? அப்படினு கேட்டா அதற்கு பதில்கள் நிறைய வரும். உண்மைதாங்க, உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள பலவித பிரச்சினைகளுக்கு தீர்வை தர கூடிய தன்மை இதில் உள்ளதாம். இதற்கு என்ன காரணமாக இருக்கும்..?
வெங்காயத்த உரிக்க உரிக்க கடைசில ஒண்ணுமே இருக்காது. ஆனால், இதோட பயன்கள் எண்ணில் அடங்காதவை. இவை எல்லாவற்றிற்கும் காரணம், இதில் உள்ள தாதுக்களும், ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் தான். அத்துடன் குறிப்பாக இதிலுள்ள hydrogen sulphide தான் இதன் சிறப்புமிக்க தன்மைக்கு காரணமாம்.
சிவப்பு வெங்காயம்..!
வெங்காயத்தில் ஒரு சில வகைகள் உள்ளது. அவற்றில் சிவப்பு வெங்காயம் அதிக பலன்களை தரவல்லது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ஏனெனில் இதில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மை அதிகமாக உள்ளதாம். எனவே, எப்போதும் உங்களை மற்றவர்களை காட்டிலும் வலிமையாக வைத்து கொள்ளும்.
பெட்ரூம் வெங்காயம்..!
வெங்காயத்தை அரிந்து கொண்டு, ஒரு பாத்திரத்தில் கீழ்பத்தியில் சொல்வது போன்று வைத்து தூங்கினால், நீங்களே இதன் பலன் என்ன என்பதை உணர்வீர்கள். முக்கியமாக உங்களின் வீடுகளில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அழிக்கபடுகிறதாம். நீங்கள் பயன்படுத்தும் வேதி ஸ்பிரேயர்களை விட இந்த வெங்காய வைத்தியம் 100 மடங்கு சிறந்தது.
அந்த காலத்து வெங்கயாம்..!
உங்களுக்கு தெரியுமா, அந்த காலத்தில் வெங்காயத்தை பல்பாகவே பயன்படுத்தினார்களாம். அதுவும் வீட்டின் வெளியிலும் உள்ளையும் உள்ள பல்புகளை போன்றே இதனையும் கட்டி தொங்கவிட்டு விடுவார்களாம். இவ்வாறு செய்வதால் அந்த காலத்தில் பரவலாக பரவி வந்த பல விசித்திர நோய்களை விரட்டி விட முடியுமாம்.
எவ்வாறு பயன்படுத்துவது..?
முதலில் வெங்காயத்தை அரிந்து பாதியை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். (சிலர் இதனை பொடியாக நறுக்கியும் பயன்படுத்துவர்) பிறகு சிறிது கொதிக்க வைத்த நீரை எடுத்து கொள்ளவும். ஒரு கப்பில் வெங்காயத்தை போட்டு கொண்டு, வெங்காயம் மூழ்காத அளவிற்கு நீரை ஊற்றி கொள்ள வேண்டும். இதனை உங்கள் படுக்கைக்கு அருகில் அல்லது கீழ் பகுதியில் வைத்து கொண்டு தூங்கவும்.
காலை எபஃக்ட்ஸ்..!
பொதுவாகவே வெங்காயம் பலருக்கு பிடிக்காத காரணம் இதன் வாசம் தான். ஆனால், இந்த வாசம் தான் உங்களை ஆபத்தான நோய்களில் இருந்து காக்கிறதாம். சுவாச பிரச்சினைகள், காய்ச்சல், சளி, போன்ற பலவற்றில் இருந்து உங்களை காக்கிறது.
சாக்சில் வெங்காயமா..?
உங்களின் சாக்சில் வெங்காயத்தை வைத்து கொண்டு தூங்கினால், இதே போன்று நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வயிற்று பிரச்சினைகளை சரி செய்யவும், குடல் மற்றும் சிறுநீர்ப்பை கோளாறுகளை குணப்படுத்தவும் இந்த வைத்தியம் உதவுகிறது.
ரத்தத்தை சுத்தம் செய்யஸ
இரவில் படுக்கும் போது மேற்சொன்ன இரு முறைகளை செய்து வந்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். அதில் இந்த பயனும் ஒன்று. உங்களின் ரத்தத்தை சுத்தம் செய்ய வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் உதவுமாம். எனவே இந்த 2 முறைகளை செய்து அதன் பயன்களையும் பெற்று கொள்ளுங்கள்