எடை குறைப்பு ருபார்ப் இலைகள் சாப்பிட
27 Nov,2018
எடை அதிகரிப்பு என்பது இன்றைய தலைமுறையில் குழந்தைகள் முதல் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை ஆகும். இந்த எடையை குறைப்பதற்காக நாம் செய்யும் முயற்சிகளும், செலவிடும் பணமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் செலவே இல்லாமல் அதிகரித்த எடையை குறைக்க இயற்கை நமக்கு பொருட்களை வழங்கியுள்ளது.
அப்படி இயற்கை நமக்கு கொடுத்துள்ள பல கொடைகளில் ஒன்றுதான் ருபார்ப் இலைகள். கீரை வகையை சேர்ந்த இந்த ருபார்ப் இலைகள் நமக்கு எடை குறைப்பு மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய இந்த இலைகள் பற்றி உங்களுக்கு தெரியாத பயன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஊட்டச்சத்துக்கள்
உலகம் முழுவதும் இந்த கீரையை பல்வேறு வடிவில் மக்கள் சாப்பிட காரணம் இதில் அதிகளவு உள்ள ஊட்டச்சத்துக்களும், இயற்கை அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகும். அமெரிக்காவின் ஊட்டச்சத்து அமைப்பின் கூற்றுப்படி இதில் உள்ள முக்கியமான ஊட்டச்சத்துக்கள் என்னவெனில் நார்ச்சத்து, புரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் கே , பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் ஆகும்.
ருபார்ப் இலைகள் விஷமா?
இந்த இலையில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் இருப்பதால் இது பல மோசமான நோய்களை உண்டாக்கும் எனவே இந்த இலை ஒரு விஷம் என்று பரவலான ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் இது முற்றிலும் உண்மையல்ல. இதனை அதிக குளிரான இடத்தில் வைத்திருந்தால் இதில் விஷத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மிதமான வெப்பம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்தால் இது மிகவம் பயனுள்ள ஒரு பொருளாகும்.
இதய பாதுகாப்பு
ருபார்ப் இலைகளில் கொழுப்புகள் மிகக்குறைவாக உள்ளது. எனவே இதனால் இதயத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. சொல்லப்போனால் இது உங்கள் உடலில் நல்லகொழுப்புகளின் அளவை அதிகரிக்கும் அதற்கு காரணம் இதில் உள்ள நார்ச்சத்துக்கள்தான். மேலும் இது இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் உங்கள் இதயத்திற்கு தேவையான ஆக்சிஜனை வழங்க உதவுகிறது.
செரிமானம்
நமது செரிமான மண்டலம் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. எனவே செரிமான மண்டலத்தை சீராகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். இதில் உள்ள அதிகளவு நார்ச்சத்துக்கள் உங்களுக்கு சீரான செரிமானத்தை நிச்சயம் வழங்கும், மேலும் மலச்சிக்கலை குணப்படுத்துதன் மூலம் உங்கள் குடல் இயக்கங்களை சீராகவும் ,மென்மையானதாகவும் மாற்றுகிறது. இதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்களுக்கு செரிமான பிரச்னைகளில் இங்கு நிம்மதி கிடைப்பதுடன் குடல் வீக்கம், குடல் புற்றுநோய் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
அல்சைமர்
உங்கள் மூளையின் செயல்திறன் மற்றும் நரம்பு மண்டல பிரச்சினைகளை சரிசெய்ய வைட்டமின் கே மிகவும் அவசியமானது. ருபார்ப் இலையில் வைட்டமின் கே போதுமான அளவு உள்ளது. இது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் செல்களை அழிப்பதுடன் புலனுணர்வு செயலையும் தூண்டுகிறது. இதனால் நியாபக மறதி மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
வலிமையான எலும்புகள்
நரம்பு மண்டல சீர்குலைவிலிருந்து மூளையை பாதுகாப்பதுடன் வைட்டமின் கே எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.மேலும் முறிந்த எலும்புகளையும் விரைவில் குணமடைய செய்கிறது. எனவே எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஏனெனில் எலும்புகளின் ஆரோக்கியாயத்திற்கு முக்கியமான கால்சியமும் இதில் அதிகம் உள்ளது.
புற்றுநோயை தடுக்கும்
ருபார்ப் இலைகளில் பீட்டா கரோட்டின் மற்றும் பிற பாலிபினோலிக் கலவைகளான லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளது. இவை வைட்டமின் ஏ போலவே செயல்படகூடியவை.இது கண் மற்றும் சருமத்தை கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கக்கூடியது. ஆன்டிஆக்சிடண்ட்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது அது உங்களுக்கு முன்கூடாய் வயதாவது, சுருக்கங்கள் ஏற்படுவது போன்ற பிரச்சினைகளை சரிசெய்கிறது. குறிப்பாக ருபார்ப் இலைகள் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கக்கூடியவை.
எடை குறைப்பு
உலகின் கலோரிகள் மிகக்குறைவாக உள்ள காய்கறிகளில் ருபார்ப் இலைகளும் ஒன்று. எடையை குறைக்கவேண்டும் அதேசமயம் ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். 100 கிராம் ருபார்ப் இலைகளில் வெறும் 21 கலோரிகளே உள்ளது. இதில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதுடன் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளையும் கரைக்கிறது. இதனால் ஒரே மாதத்தில் 10 கிலோ வரை குறைக்க இயலும்.