பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..!விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு
16 Oct,2018
இந்த நவீன உலகத்தில் நோய்களுக்கு பஞ்சமே இல்லை. நம்மை சுற்றி இருக்கின்ற எல்லோரும் ஏதோ ஒரு வகையில் நோயினால் அவதிப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். ஒரு சில நோய்கள் மிகவும் கொடியதாக கருதப்படுகிறது. அந்த வகையில் சர்க்கரை நோயை நாம் சேர்த்து கொள்ளலாம். பல வகையான
மருந்துகள் இதனை கட்டுப்படுத்த வந்தாலும், அவையெல்லாம் சரியான தீர்வை தருவதில்லை.
மேலும், தற்போது விஞ்ஞானிகள் ஒரு சில முக்கிய ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலை சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம் என்ற அற்புத செய்தியை வெளியிட்டுள்ளனர். பால் எப்படி சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் என்பதை பற்றி இனி நாம் விரிவாக தெரிந்து கொள்வோம்.
உலகை ஆட்டிப்படைக்கும் நோய்..!
இன்று உலகையே அச்சுறுத்தும் ஒரு கொடிய நோய் என்றால், அது நீரிழிவு நோய்தான். நோய்கள் இன்றி வாழ்ந்த நம் முன்னோர்கள் காலம் முற்றிலுமாக மலையேறி போய், நோய்கள் மட்டுமே வாழ்வு’ என்ற காலத்தை நாம் உருவாக்கி கொண்டிருக்கிறோம். பத்தில் 6 பேருக்கு சர்க்கரை நோய்கான அறிகுறிகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது.
பிறப்பு முதல் இறப்பு வரைஸ!
நாம் குழந்தையாக பிறந்ததில் இருந்தே பால் சார்ந்த உணவுகளையே முதலில் சாப்பிட்டு வருவோம். பாலில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பதாலே அதனை நாம் உண்கிறோம். பிடிவாதம் பிடிக்கும் குழந்தையை எப்படியாவது சமாளித்து பாலை கொடுத்து விடுவார். இத்தகைய மகத்துவம் பெற்ற பால் கொடிய நோயான நீரிழிவையும் கட்டுப்படுத்த கூடியதாக உள்ளது.
விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு..!
பாலை தினமும் குடித்து வந்தால் நீரிழிவு நோயிற்கு உதவும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். குறிப்பாக பாலை குடித்தால் சர்க்கரையின் அளவை அன்றைய நாள் முழுவதுமே குறைவாக வைத்து கொள்ளும் ஆற்றல் பாலிற்கு உள்ளது. இந்த கண்டுபிடிப்பு முக்கியமாக டைப் 2 நீரிழிவு நோயிற்கு உதவும்.
காரணம் என்னஸ?
எப்படி பால் குடித்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். இதற்கு முழு காரணமும் புரதம் தான். பாலில் உள்ள அதிக புரத சத்தே சர்க்கரையை நோயை கட்டுக்குள் வைக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இது அடிக்கடி பசி எடுப்பதையும் தடுக்கும்.
சிறந்த நேரம் எதுஸ?
பாலை காலை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். மற்ற நேரத்தை காட்டிலும் காலை நேரமே சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த நேரம் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அத்துடன் இது உடல் பருமன் ஆவதையும் தடுத்து விடும்.
60,000 பேரை கொண்ட ஆராய்ச்சி..!
இந்த ஆராய்ச்சிக்கு கிட்டத்தட்ட 60,000 பேரை கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் டப்ட் பல்கலைக்கழகம் இணைத்து நடத்திய இந்த ஆய்வில் 60,000 பேரை தினமும் காலை உணவில் பால் சேர்த்து உண்ண சொன்னார்கள். இவ்வாறு செய்வதன் விடையாக, சர்க்கரை நோயிற்கு ஒரு தீர்வு கிடைத்தது.
டைப் 2 நீரிழிவா..?
இந்த ஆய்வின் முடிவில் மேலும் சில முடிவுகள் கிடைத்தது. அதாவது, டைப் 2 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பால் சிறந்த உணவாக இருக்கிறதாம். மேலும், பாலை குடித்து வருவதால் டைப் 2 சர்க்கரை நோய் எளிதில் கட்டுக்குள் வருமாம்.
ஏராளமான சத்துக்கள்ஸ!
நாம் அன்றாடம் குடிக்கும் பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பால் குடித்து வருவதால் உடலின் நலன் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. 1 கப் பாலில் உள்ள சத்துக்கள்ஸ
புரதம் 8 கிராம்
கொழுப்பு 8 கிராம்
கால்சியம் 28%
பாஸ்பரஸ் 22#
வைட்டமின் பி2 18%
வைட்டமின் டி 24%
பொட்டாசியம் 10%
செலினியம் 13%
பால் சார்ந்த உணவுகள் எப்படி..?
பால் சார்ந்த உணவுகளை எடுத்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக யோகர்ட், தயிர், நெய் போன்றவை சிறந்த பால் சார்ந்த உணவுகள். இவற்றை உணவில் அளவாக சேர்த்து கொள்வதால் சர்க்கரை நோயாளிகளுக்கும், சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கும் நலன் தரும்.
முக்கிய குறிப்புஸ
உங்களின் ரத்தத்தில் அதிகமான சர்க்கரை அளவு இருந்தால் முதலில் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். இல்லையேல் உங்களது உடல் நலம் சீரற்ற முறையில் வேலை செய்ய தொடங்கி விடும். எனவே, பாலை அளவாக குடித்து ஆரோக்கியமாக வாழுங்கள் நண்பர்களே.