மார்பகத்தில் கட்டிகள் ( அலட்சியம் வேண்டாம் – எச்சரிக்கும் மருத்துவ உலகம்
14 Sep,2018
மருத்துவத்தில் எந்தளவுக்கு இந்த உலகம் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறதோ
அதைவிட பன்மடங்கு நோய்களில் முன்னேற்றத்தை சந்தித்து வரு கிறது. இதில் ஆண் பெண் என்ற வேறு பாடில்லை. மிகவும் கொடூர மாக நோய்க ளில் ஒன்றாக கருதப்படுவது புற்றுநோய்தான்
இந்த புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதி கரித்துக்கொண்டேதான் செல்கிறது. அதற்கு காரணம் பெண்களுடைய குறைவான நோயெதிர்ப்பு சக்தியும், புற்றுநோய் பற்றியபோதிய விழிப்புணர்வும் இல்லாததும்தான். மேலும் பெண்கள் அலட்சியமாக நினைக்க கூடாத சில புற்றுநோயின் அறிகுறிகள் என்னவென்பதை பார்க்க லாம்.
பெண்களே உஷார்! இந்த அறிகுறிகளையெல்லாம் அலட்சியமாக எடுத்துக்காதீங்க
உடல் எடை குறைதல்
திடிரென உடல் எடை ( Body Weight ) தானாக குறைந்தால் அவை நுரையீரல் ( #Lungs ), கணையம் ( #Pancreas ) போன்றவற்றில் ஏற்படு ம் புற்றுநோய் ( Cancer ) காரணமாக கூட இருக்கலாம். மேலும் புற்றுநோய் செல்கள் அதிகரிக்க உங்கள் ஆற்றலை எடுத்துக் கொள்வதால் உங்க ளுக்கு எடை இழப்பு ஏற்படலாம்.
மார்பகத்தில் கட்டிகள் ( #Tumors of the Breast )
மார்பகப்பகுதிகளில் கட்டிகள் இருந்தாலோ, அளவு மற்றும் வடி வத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, சிவப்புநிறத்தில் தடிப்பு, அரிப்பு மற்றும் மார்பகத்திற்கு அடியில் வலி ( Pain ) போன்ற அறிகுறி கள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ( #Breast #Cancer )
பிறப்புறுப்பில் துர்நாற்றம்
பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுதல், அடர் நிற சிறுநீர், போன்ற வை கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் ( #Ovarian Cancer ) அறிகுறி யாகும். இது மாதவிடாய் காலத்திலோ, அதற்கு பிறகோ ஏற்பட லாம். சிலசமயம் இரத்தக்கசிவு கூட ஏற்படலாம்.
அதிகபடியான சோர்வு
உடலில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியின் குறைந்தால் சோர்வு ஏற் படும். மேலும் அதிகபடியான சோர்வு ஏற்பட்டால் அவை வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் இவை இரத்தத் தில் வெள்ளை அணுக்கள் அதிகரித்து பின்னர் சிவப்பு அணுக்க ளின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
காய்ச்சல்
அடிக்கடி ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் ( Infection ) லூக்கோமியா அல்லது லிம்போமா நோயின் அறிகுறியாக இருக் கலாம். இந்த இரண்டுமே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இருமல்
தொடர்ச்சியான இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். சில சமயம் இது மூச்சுக்குழலில் ஏற்படும் பாதிப்புக ளாலும் ஏற்படலாம். மேலும் இரண்டு வாரங்களுக்குமேல் தொடர் ந்து இருமல் இருப்பின் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.
மலத்தில் இரத்தம்
குடலில் ஏற்படும் புற்றுநோய் முதலில் தெரியாவிட்டாலும் வயிற்று வலி, மலச்சிக்கல், சோர்வு, மலத்தில் இரத்தம் போன்றவற்றின் மூலம் இதனை கண்டறியலாம். இந்த குடல் புற்றுநோய் பெருங்குடல் அல்ல து மலக்குடலில் ஏற்படும். இதனால் பெருங்குடலின் அகலம் அதிகரிக் கும்.
மூச்சு திணறல்
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது உணவுக்குழாயில் ஏற்படும் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனால் உணவுக் குழாயின் அளவு சுருக்கப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.