உங்கள் தொப்புள் பற்றி நீங்கள் அறிந்திராத 10 சுவாரசிய தகவல்களை தெரிந்து கொள்ளணுமாஸ?
08 Sep,2018
நமது உடலின் ஒவ்வொரு பாகமும் பல விதமான செயல்பாட்டை கொண்டவை. இருக்கின்ற ஒவ்வொரு பாகத்திலும் எண்ணற்ற செல்களின் நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. சிறு கருவாக நாம் உருவானது மிக சாதாரண செயல் கிடையாது. இது இயற்கையின் அற்புத நிகழ்வாகத்தான் மருத்துவர்களால் எண்ணப்படுகிறது
.
அந்த வகையில் ஒரு சிசுவையும் தாயையும் இணைக்கும் பந்தமாக இருப்பது தொப்புள் கொடிதான். குழந்தையாக பிறந்த பிறகு இதனை நீக்கி விடுவார். ஆனால், அந்த வடுவை நாம் அழிக்க முடியாது. ஏனெனில் அதுதான் தொப்புள் என்ற ஒன்றாக நம்முடனே இறுதி காலம் வரை வரும். இந்த பதிவில் தொப்புளை பற்றிய 10 சுவாரசிய தகவல்களை பற்றி நாம் அறியலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் வடு..!
நம் உடலில் எண்ணற்ற வடுக்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அவை அனைத்தும் நாம் விழும் போதோ, விளையாடும் போதோ ஏற்பட்டவை. ஆனால், நம் உடலின் இயற்கையாகவே ஏற்பட்ட முதல் தழும்பு இந்த தொப்புள்தான். தாயையும் குழந்தையையும் குறிக்கும் ஒரு அளவு கோளாக கூட இதனை கருதலாம்.
எண்ணற்ற பாக்டீரியாக்களின் இருப்பிடம்..!
தொப்புளில் பல வகையான பாக்டீரிகள் வாழ்கின்றன. கிட்டத்தட்ட 2,400 வகையான பாக்டீரியாக்கள் தொப்புளில் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றது. இவை நம் உடலில் உள்ள சில பாகங்களை போன்றே அசுத்தம் செய்யாமல் இருப்பதால் ஏற்படுகின்றதாம்.
இந்திய மருத்துவத்திலும், சீன மருத்துவத்திலும்ஸ!
அக்குபுஞ்சர் முறையிலும் தொப்புள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உடல் பிணிகளை போக்குவதில் தொப்புளின் பங்கு இன்றியமையாததுதாகும். உடலின் செயல்பாட்டை குறிக்கின்ற முக்கியமான 7 சக்கரங்களில் இதுவும் ஒன்று. இதனை மருத்துவ முறையில் முக்கிய பாகமாக கருதுகின்றனர்.
வெளி தொப்புள்ஸ
பொதுவாக தொப்புள் பல விதமாக வகை படுத்தப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தொப்புள் இருக்குமாம். அதில் ஒரு வகைதான் வெளி புறமாக தொப்புள் இருப்பது. இது 10 சதவிகித மக்களுக்கே இருக்குமாம். இவை கவர்ச்சி குறைந்த தொப்புள்களாக எண்ணப்படுகிறது.
நலம் பெறஸதொப்புள் கொடி..!
இன்றைய மருத்துவத்தில் பல வித முறைகளை நாம் பின்பற்றினாலும், பண்டைய கால மருத்துவம் எப்போதும் சிறப்பு பெற்றதாக தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றுதான் “ஸ்டெம் செல்” முறை என்பதை நவீன மருத்துவம் பயன்படுத்துகிறது. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த முறையை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். தொப்புள் கொடியை தாயத்தில் கட்டி வைத்து அதனை உயிருக்கு ஆபத்தான நிலைகளில் உபயோகித்தனர்.
தொப்புள் அறுவை சிகிச்சைஸ!
தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறதே என யோசிக்கிறீர்களாஸ? உண்மைதாங்க, தொப்புள் என்ற இந்த சிறிய தழும்பை கூட அறுவை சிகிச்சை செய்வார்களாம். குறிப்பாக இதனை பிளாஸ்டிக் சர்சேரி செய்வது பலரின் வழக்கமாக இருக்கிறதாம். ஆனால், மிகவும் கடினமான அறுவை சிகிச்சைகளின் ஒன்றாக இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சரியான தொப்புள் எது?
தொப்புளின் வடிவம் ஒவ்வொருவருக்கும் பல வகைகளில் மாற்றம் பெரும். அந்த வகையில் இவை வெளி தொப்புள், உள் தொப்புள் என இரு வகையாக பிரிக்கின்றனர். ஆனால், T வடிவ தொப்புள் சரியான தொப்புள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தொப்புளின் அழுக்குஸ
பொதுவாக உடலில் அழுக்குகள் அதிகம் சேரத்தான் செய்யும். அந்த வகையில் தொப்புளில் சேர்ந்துள்ள அழுக்குகள் சற்றே அதிகமானவை. இவை பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே அதிகம் இருக்குமாம். ஏனெனில் ஆண்களின் உடலில் அதிகப்படியான முடிகள் இருப்பதால் தொப்புளில் அழுக்குகள் அதிகம் இருக்கிறது. மேலும் இது துணிகளில் இருந்தும் சேறுமாம்.
சென்சார் செய்யபட்ட தொப்புள்கள்ஸ!
பொதுவாக தொப்புள்களை பெரும்பாலான மக்கள் விரும்ப செய்வார்கள். அவற்றின் அழகை ரசிக்கவும் செய்வார்கள். ஆனால், 1960 களில் எடுக்கப்பட்ட படங்களில், பெண்களின் தொப்புள்களை சென்சார் செய்யப்பட்டே படம் வெளியிட படுமாம். அந்த அளவிற்கு இதனை வெளி காட்டப்படாத உறுப்பாக கருதினர்.