ஒரு சில மனிதர்களை மட்டும் அதிகம் கடிக்கும் கொசுக்கள்! என்ன காரணம் தெரியுமா?
26 Aug,2018
3000 க்கும் மேற்பட்ட கொசு இனங்களில் சிறு இனங்களே மனிதர்களை கடிப்பதில் தனித்துவம் வாய்ந்தவை.
மனிதர்களிடம் இருந்து இரத்தம் குடிக்கும் கொசுக்களை தவிர மற்ற கொசுக்கள் பிற உயிரினங்களை சார்ந்தே வாழ்கின்றன. அதாவது தாவரங்களை உண்ணுதல் இதுபோன்ற செயல்களில் ஈட்படுகின்றன.
ஆனாலும் Aedes aegypti மற்றும் Anopheles gambiae என்னும் இந்த இரண்டு வகை கொசுக்கள் மட்டும் மனித இரத்தத்தை விரும்பி குடிப்பதாலும், மனிதர்களுக்கு நோய்களை உண்டாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
கொசுக்கள் ஒரு சில மனிதர்களை மட்டும் அதிகமாக கடிக்கும். அதற்கு காரணம் அவர்கள் தோழில் உள்ள ஒரு சில நுண்ணுயிர்கள்தான்.
இந் நுண்ணுயிர்கள் பொதுவாக நோய்களை ஏற்படுத்தாத பாக்டிரியா மற்றும் பங்கசுக்கள். இவை நமது தோல், துளைகள் மற்றும் மயிர் நுண் குழிழ்களில் அதிகாமாக வசிக்கின்றன.
இவைகள் ஆவியாகக்கூடியவை. இவைகள் ஆவியாகும் போது ஏற்படும் ஒருவிதமான நாற்றமே கொசுக்கள் நாம் அவற்றிற்கு எவ்ளவு சுவையானவர்கள் என்பதை காட்டுகிறது.
நம்மிலிருக்கும் இந் நுண்ணுயிர்கள் மனிதருக்கிடையில் இலகுவாக கடத்தப்படுவதில்லை. இவை நம்மில் 1 சதுர சென்ரி மீட்டருக்கு 1 மில்லியன் பாக்டீரியா வீதம் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான இனங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.